
பத்தாவது ஆசிய கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியில் 1-1 என்ற கணக்கில் தென்கொரியாவுடனான ஆட்டத்தை சமன் செய்தத் இந்தியா.
எட்டு அணிகள் இடையிலான 10-வது ஆசிய கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.
இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மலேசியா, தென்கொரியா அணிகளும் 2-வது சுற்றுக்கு முன்னேறின.
இரண்டு சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன்முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும்.
இரண்டாவது சுற்றில் நேற்று இந்திய - தென்கொரியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரண்டு அணிகளும் பல வாய்ப்புகள் கிடைத்தும் அவற்றை வீணடித்தன. இதனால் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் எதையும் அடிக்கவில்லை.
இந்த நிலையில் இரண்டாவது பகுதி தொடங்கியதும் ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் தென்கொரியா அணியின் லீ சூன்க்சூன் முதல் கோல் போட்டு ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
பின்னர், இந்தியாவின் முயற்சிகள் அணைத்தும் தொடர்ந்து வீணாகின. இந்த நிலையில் இந்தியா வெற்றி பெறாது என எதிர்ப்பார்த்த நிலையில் ஆட்டத்தில் கடைசி சில நிமிடங்களில் இந்திய அணியின் குர்ஜந்த் சிங் கோல் அடித்தார். இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.