
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நிலைத்து நிற்கிறார்.
அவர் 900 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் (878) 2-ஆவது இடத்திலும், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (861) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
மற்றொரு இந்திய சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா 805 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தில் உள்ளார்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹக் 3 இடங்கள் முன்னேறி 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் ஜோ ரூட் 3-ஆவது இடத்தில் உள்ளார்.
இந்திய பேட்ஸ்மேன்களில் அஜிங்க்ய ரஹானே 825 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தில் உள்ளார்.
புஜாரா, கோலி ஆகியோர் முறையே 15 மற்றும் 17-ஆவது இடங்களில் உள்ளனர்.
ஆல்ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.