ஒரு சம்பவம் செஞ்சாலும் முறையான சம்பவம் அஷ்வின்!!

By karthikeyan VFirst Published Aug 23, 2018, 9:55 AM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்பின் பவுலர் அஷ்வின் ஒரு விக்கெட் எடுத்தாலும், மெச்சும்படியான பவுலிங்கில் அந்த விக்கெட்டை எடுத்தார். 
 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்பின் பவுலர் அஷ்வின் ஒரு விக்கெட் எடுத்தாலும், மெச்சும்படியான பவுலிங்கில் அந்த விக்கெட்டை எடுத்தார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி, மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. 

வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடிய இந்திய அணி வீரர்கள், எல்லா வகையிலும் சிறப்பாக ஆடினர். பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அசத்தினர். முதல் இரண்டு போட்டிகளில் மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடாத நிலையில், அஷ்வின் அந்த போட்டிகளில் அசத்தினார். 

ஆனால் அஷ்வின் விக்கெட்டுகளை வீழ்த்தி குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது டெஸ்டில் அவரது பவுலிங் பெரிதாக எடுபடவில்லை. இந்த போட்டியின்போது முதுகுவலி இருந்ததால் முதல் இன்னிங்ஸில் அஷ்வின் பெரும்பாலும் ஓய்வறையில்தான் இருந்தார். ஒரு ஓவர் மட்டுமே முதல் இன்னிங்ஸில் வீசினார். 

இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை வீழ்த்தும் பணியை ஹர்திக் பாண்டியா பார்த்துக்கொண்டார். அவர் மட்டுமே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட்டுகளை சரிக்கும் பணியை பும்ரா கையில் எடுத்தார். இந்த இன்னிங்ஸில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இரண்டாவது இன்னிங்ஸிலும் அஷ்வினுக்கு விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. எனினும் கடைசி விக்கெட்டாக ஆண்டர்சனை வீழ்த்தி ஆட்டத்தை முடித்துவைத்தார் அஷ்வின். ஆண்டர்சன் அவுட்டான அந்த பந்து, அவருக்கு அதிர்ச்சியளிக்க கூடிய வகையில் ஸ்பின்னாகி வந்தது. அஷ்வின் அந்த பந்தை லெக் ஸ்பின்னாக வீசினார். இடது கை பேட்ஸ்மேனான ஆண்டர்சனுக்கு ஆஃப் திசையில் பிட்ச் ஆகி அவரை நோக்கி வேகமாகவும் அதிகமான கோணத்தில் திரும்பியது பந்து. அதை சமாளிக்க முடியாத ஆண்டர்சனின் பேட்டில் பட்டு பந்து மேலெழும்பியது. அந்த கேட்ச்சை நிதானமாக ரஹானே பிடித்தார். இந்த போட்டியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் இருந்த அஷ்வின், கடைசி விக்கெட்டை வீழ்த்தினார். அதுவும் ஆண்டர்சனை அச்சுறுத்தும் விதமாக பவுலிங் வீசி வீழ்த்தினார் அஷ்வின். மிகவும் சிறப்பான பந்து அது. 
 

click me!