நிரந்தர கேப்டனாகிறார் ரோஹித்..? கேள்விக்குறியாகும் கோலியின் நிலை..?

By karthikeyan VFirst Published Nov 8, 2018, 3:36 PM IST
Highlights

ரோஹித் சர்மாவை நிரந்தர கேப்டனாக்க வேண்டும் என்று எழுந்துள்ள கருத்து குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
 

ரோஹித் சர்மாவை நிரந்தர கேப்டனாக்க வேண்டும் என்று எழுந்துள்ள கருத்து குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைசிறந்த வீரராக இருந்தாலும் அவரது கேப்டன்சியின் மீது பல விமர்சனங்கள் உள்ளன. கள வியூகம், பவுலர்களை பயன்படுத்தும் விதம், வீரர்களுடனான அணுகுமுறை ஆகியவை மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அதேநேரத்தில் ரோஹித் சர்மா கேப்டனாகும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவரது கேப்டன்சி திறமையை நிரூபித்துவருகிறார். சிறப்பான கேப்டன்சியால் வெற்றிகளை குவித்துவருகிறார். அவரது கேப்டன்சியில் நிதாஹஸ் டிராபி, ஆசிய கோப்பை ஆகிய தொடர்களை இந்திய அணி வென்றது. ரோஹித் சர்மா வெற்றிகளை குவிக்கும்போதெல்லாம் அவரை நிரந்தர கேப்டனாக்க வேண்டும் என்ற குரல்கள் எழுகின்றன.

நிரந்தர கேப்டனாக தயார் என்று ரோஹித் சர்மாவே ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்களும் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை புகழ்ந்துள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரை ரோஹித் சர்மாவின் கேப்டன்சியின் கீழ் இந்திய அணி வென்றுள்ள நிலையில், டி20 அணிக்கு ரோஹித்தே கேப்டனாக வேண்டும் என்ற குரல் தற்போதும் எழுந்துள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா, டி20 அணிக்கு விராட் கோலிக்கு பதிலாக ரோஹித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதற்கு இது சரியான நேரமும் அல்ல. டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்றுவிதமான போட்டிகளிலும் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி கொண்டிருக்கிறார். தற்போதைக்கு விராட் கோலியே கேப்டனாக செயல்படலாம். அதேநேரத்தில் கிரிக்கெட்டில் எப்போதும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஒருவேளை இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் விராட் கோலி, டெஸ்ட் அணிக்கு மட்டும் கேப்டனாக செயல்படுவதாக கூறி மற்ற அணிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகலாம். ஆனால் அதுகுறித்து என்னிடம் கேட்டால், அதுகுறித்து கருத்து தெரிவிக்க நான் சரியான நபர் இல்லை. அதுதொடர்பாக தேர்வாளர்கள்தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
 

click me!