ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் கடைசி போட்டி இன்று; மிஸ் பண்ணிடாதீங்க...

Asianet News Tamil  
Published : Jan 04, 2018, 11:20 AM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா  - இங்கிலாந்து மோதும் கடைசி போட்டி இன்று; மிஸ் பண்ணிடாதீங்க...

சுருக்கம்

Ashes Test Australia - the final match in the UK today Do not miss ...

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று தொடங்குகிறது.

இந்தத் தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் வென்று ஆஸ்திரேலியா ஏற்கெனவே தொடரை கைப்பற்றிய நிலையில், 4-வது ஆட்டத்தை சமன் செய்தது இங்கிலாந்து.

கடைசி ஆட்டத்திலும் வெற்றி முனைப்புடன் ஆஸ்திரேலியாவும், இந்த வெற்றியாவது பெற வேண்டும் என்று அடைய வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்தும் இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக 4-ஆவது டெஸ்டில் பங்கேற்காத வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், கடைசி டெஸ்டில் பங்கேற்கத் தயார் என்று கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார். அவ்வாறு அவர் களம் காணும் பட்சத்தில் சுழற்பந்துவீச்சாளர் ஆஷ்டன் அகருக்கு ஓய்வளிக்கப்படலாம்.

முதல் 3 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்டார்க் அணிக்குத் திரும்புவது, ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சாதகமாம். இதனிடையே, இத்தொடரில் இதுவரை 604 ரன்கள் குவித்துள்ள ஸ்மித், முதுகுப் பகுதியில் இந்த வாரம் காயம் கண்டிருந்தார். எனினும், தற்போது நலமுடன் இருப்பதாகவும், கடைசி டெஸ்டில் நிச்சயம் விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக கிறிஸ் வோக்ஸுக்கு பதிலாக, சுழற்பந்துவீச்சாளர் மேசன் கிரேன் களம் காண்கிறார். இது மேசனுக்கு முதல் சர்வதேச டெஸ்டாகும்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இழந்துவிட்ட நிலையில், அடுத்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டிகளில் முக்கிய வீரரான வோக்ஸ் அப்போட்டிகளுக்கு முன்பாக மீளும் வகையில், அவருக்கு தற்போது ஓய்வளித்துள்ளது இங்கிலாந்து.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்