விரைவில் தமிழ் நல்லா பேசுவேன்: நெல்லையில் சபதம் எடுத்த தோனி!

First Published Aug 6, 2018, 12:01 PM IST
Highlights

அடுத்த ஐபிஎல் போட்டி தொடங்குவதற்குள் தமிழ் நன்றாகக் கற்றுக்கொண்டு பேசுவேன்,'' என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் 'தல' தோனி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 

அடுத்த ஐபிஎல் போட்டி தொடங்குவதற்குள் தமிழ் நன்றாகக் கற்றுக்கொண்டு பேசுவேன்,'' என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் 'தல' தோனி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த நிலையில்  'தல' தோனி திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மைதானத்தில் மதுரை பாந்தர்ஸுக்கும், கோவை கிங்ஸ் அணிக்கும் இடையேயான ஆட்டத்தை கண்டுகளிக்க வந்தார். ஆட்டம் தொடங்கும் முன் டாஸ் போடும்போது அங்கு கூடியிருந்த ரசிகர்களின் ஆரவாரத்துக்கிடையில் பேசிய தோனி “ இங்கு நான் டிஎன்பிஎல் போட்டிகளைக் காண வந்துள்ளேன். ஒவ்வொரு முறை ஐபிஎல் நடக்கும் போதும் நான் கொஞ்சம்  தமிழ் கற்றுக்கொள்வேன். ஆனால் அடுத்துவரும்  ஐபிஎல் தொடரின்போது தமிழ் வார்த்தைகள் எல்லாம் மறந்துபோய்விடுகிறது. இதனால் ஒரு உறுதி எடுத்துள்ளேன். அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடருக்குள் கண்டிப்பாக நன்றாக தமிழ் கற்றுக்கொள்வேன்” என்று தெரிவித்தார். உடனே அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கைகளைத் தட்டி மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இதனால் தோனி மேலும் உற்சாகம் அடைந்தார். தோனி தமிழகம் வந்திருப்பதையொட்டி போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு  அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவுகள் தயாரித்து கொடுக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக தோனி நெல்லை மாவட்டம் குண்டாறு அணைப்பகுதிக்கு மேல் உள்ள தனியார் அருவிப்பகுதியில் தோனி சுற்றுலா சென்றார். அங்கு அவரைக்கான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். இதனால் குண்டாறு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தமிழகம் வந்திருப்பதையொட்டி தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளது.

click me!