சென்னையில் நடந்து வரும் தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் எதிரணி வீரர் தாக்கியதில் அருணாச்சலப்பிரதேச வீரர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
சென்னையில் நடந்து வரும் தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் எதிரணி வீரர் தாக்கியதில் அருணாச்சலப்பிரதேச வீரர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான வாகோ இந்தியா சீனியர்ஸ் மற்றும் மாஸ்டர்ஸ் கிக் பாக்ஸிங் போட்டி நடந்து வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்று வருகிறார்கள்.
அரைகுறை ஆடை பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமில்லை: சர்ச்சைத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி இடமாற்றம்
இதில் கடந்த 21ம் தேதி நடந்த போட்டியில் மகாராஷ்டிரா வீரர் கேசவ் முடேலும், அருணாச்சலப்பிரதேச வீரர் யோரா டேட் ஆகியோரும் மோதினர். இதில் முடேல் தாக்கியதில் யோரோ டேடுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
undefined
யோரா டேட்டுக்கு கடந்த 3 நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து, அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள இரா தாதி மாவட்டத்தில் உள்ள அவரின் சொந்த ஊரான தலி கிராமத்துக்கு யோரா டேட் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது.
I am extremely shocked & sad to hear the sudden demise of Late Yora Tade; a young promising boxer of our state. It’s a great loss for Sports fraternity of our state in general. My deepest condolence to the bereaved family. May his soul rest in peace.🙏 pic.twitter.com/pYpBm5fZR0
— Mama Natung (@NatungMama)அருணாச்சல்பிரதேச முதல்வர் உத்தரவின்படி, தமிழக அரசு,மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் துணையுடன், அந்த மாநிலவிளையாட்டுத்துறை செயலாளர், யோரா டேட் உடலை கொண்டு செல்ல ஏற்பாடுகளை செய்துள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷுக்கு நெருக்கடி! ஆர்ஜேடி தலைவர்கள் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை
அருணாச்சலப்பிரதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு, அருணாச்சலப்பிரதேச கிக்பாக்ஸிங் கூட்டமைப்பு ஆகியோர் டேட் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50ஆயிரத்தை நிவாரணமாக டேட் குடும்பத்துக்கு வழங்கினார்.
டேட்டின் பயிற்சியாளர் பிரகாஷ் லிம்பு கூறுகையில் “போட்டியின் போது எதிரணி வீரர் தாக்கியதில் தலையில் அடிபட்டு திடீரென வழுக்கி விழுந்தார். போட்டி முடிந்தபின் டேட் தனக்கு மயக்கமாக இருக்கிறது எனத் தெரிவித்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.
Jolted to learn that our bright Kickboxer Yora Tade left for his heavenly abode. Too early to leave us, dear Tade! No words to express my grief. You will ever be in our hearts. Condolences to bereaved family, friends & admirers. May your journey to ultimate abode be peaceful! 🙏 pic.twitter.com/d1wgHDoGAp
— Pema Khandu པདྨ་མཁའ་འགྲོ་། (@PemaKhanduBJP)அப்போது டேட் தலையில் சிரிபிரல் ஒடிமா அதாவது மூளையில் ரத்த உறைதலும், வீக்கமும் இருப்பது தெரிந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 3 நாட்கள் தீவிர சிகிச்சையளித்தும் டேட் குணமடையவில்லை.
சிறுவயதிலிருந்தே நான் டேட்டுக்கு பயிற்சி அளித்தேன். சமீபத்தில்தான் உடல்கல்வி படிப்பில் முதுகலை பட்டத்தை முடித்தார்” எனத் தெரிவித்தார்
குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! ரேஷனில் இனி இலவச பொருட்கள் கிடையாது
அருணாச்சலப்பிரதேச முதல்வர் பிமா கண்டு ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் “ எங்களின் சிறந்த கிக்பாக்ஸர் யோரா டேட் இறப்பு செய்தி கேட்டு அதிர்ந்துவிட்டேன். மிகவிரைவாக எங்களை விட்டு டேட் சென்றுவிட்டார். என்னுடைய சோக்தை வெளிப்படுத்த வார்த்தையில்லை. எங்களின் இதயத்தைவிட்டு டே செல்லமாட்டார். அவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், எனது வருத்தங்களை தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.