விராட் கோலியின் மோசமான ஃபார்ம்.. விமர்சிப்பவர்களின் வாயை அடைத்த ரவி சாஸ்திரி

By karthikeyan VFirst Published Aug 23, 2022, 9:38 PM IST
Highlights

விராட் கோலி ஃபார்மில் இல்லாமல் தவித்துவரும் நிலையில், கோலி குறித்து பேசியுள்ளார் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ஆகஸ்ட் 28ம் தேதி கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கிறது. இந்த ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் 3 முறை மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலில், அனுபவமும் இளமையும் கலந்த கலவையான நல்ல பேலன்ஸான வலுவான அணியாக இந்தியா இம்முறை களமிறங்குகிறது. 

இதையும் படிங்க - ரோஹித், கோலி, ராகுல்லாம் இல்ல.. அந்த பையன் தான் டேஞ்சரஸ் பிளேயர்.. பாகிஸ்தானை எச்சரிக்கும் வாசிம் அக்ரம்

இந்திய அணியின் நட்சத்திர வீரரும் மேட்ச் வின்னருமான விராட் கோலி ஃபார்மில் இல்லாதது மட்டுமே இந்திய அணிக்கு ஒரே பிரச்னை. ஆனால் கோலி ஸ்கோர் செய்யாவிட்டாலும், அதை ஈடுகட்டும் அளவிற்கான பேட்டிங் ஆர்டர் இந்திய அணியில் உள்ளது. ஆனால் கோலி நன்றாக ஆடினால் அந்த போட்டி வேற லெவலில் இருக்கும். கோலி ஸ்கோர் செய்தால் இந்தியா ஜெயித்துவிடும். எனவே ஃபார்மில் இல்லாத கோலி ஃபார்முக்கு வருவது இந்தியாவிற்கு முக்கியம்.

விராட் கோலி ஃபார்மில் இல்லாதது இந்திய அணிக்கு கவலையளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இளம் வீரர்கள் அபாரமாக ஆடிவரும் நிலையில், விராட் கோலி சரியாக ஆடாவிட்டாலும், அவரது பெயருக்காக அவரை ஆடும் லெவனில்  வைத்திருப்பது அணிக்கு பாதகமாக அமையும்.

அதனால் விராட் கோலி ஆசிய கோப்பையிலும் சரியாக ஆடாதபட்சத்தில் அவரை டி20  உலக கோப்பையில் ஆடவைப்பதவிட, அவரது இடத்தில் ஃபார்மில் உள்ள ஒரு இளம் வீரரை இறக்கலாம் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துள்ளன. எனவே விராட் கோலிக்கு ஆசிய கோப்பை தொடர் வாழ்வா சாவா தொடர் ஆகும்.

இதையும் படிங்க - 2-3 பாராசிட்டமலை போட்டு போய் வேலைய பாருங்க டிராவிட்..! ரவி சாஸ்திரி அதிரடி

விராட் கோலி ஆசிய கோப்பையில் ஆடுவதை பொறுத்துத்தான் டி20 உலக கோப்பைக்கான அணியில் அவரை தேர்வு செய்ய முடியும் என்று அணி தேர்வாளர் ஒருவர் அண்மையில் கூறியிருக்கிறார். 

விராட் கோலியின் ஃபார்ம் தான் ஆசிய கோப்பைக்கு முன்  பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில், அதுகுறித்து பேசியுள்ள ரவி சாஸ்திரி, சமீபத்தில் விராட் கோலியிடம் பேசவில்லை. அவ மாதிரியான பெரிய வீரர்கள், சரியான நேரத்தில் வெகுண்டெழுவார்கள். ஆசிய கோப்பைக்கு முன் ஃபார்மில் இல்லாமலிருப்பது, அவர் எப்பேர்ப்பட்டவீரர் என்பதை காட்டுவதற்கு நல்ல வாய்ப்புதான். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் அரைசதம் அடித்துவிட்டால் போதும். விமர்சிப்பவர்களின் வாயை  அடைத்துவிடலாம் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
 

click me!