தவறான தகவல்களை அளித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் அனுராக் தாக்குர்…

Asianet News Tamil  
Published : Jul 14, 2017, 09:55 AM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
தவறான தகவல்களை அளித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் அனுராக் தாக்குர்…

சுருக்கம்

Anurag Thakar demanded unconditional apology for misinformation ...

பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததற்காக முன்னாள் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

பிசிசிஐயை மறுசீரமைக்கும் வகையில் லோதா கமிட்டி அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த அனுராக் தாக்குர் தொடர்ந்து இடையூறாக இருந்தார்.

இதனிடையே பிசிசிஐ நிர்வாகத்தில் சிஏஜி பிரதிநிதியை நியமிப்பது, லோதா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்துவது போன்றவை பிசிசிஐயின் தன்னாட்சியைப் பாதிக்கும் என கடிதம் அளிக்குமாறு ஐசிசியிடம் அனுராக் தாக்குர் கேட்டதாக லோதா கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த அனுராக் தாக்குர், அதுபோன்ற கடிதம் எதையும் ஐசிசியிடம் கேட்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் ஐசிசி தலைவர் சஷாங்க் மனோகர் தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில், அனுராக் தாக்குர் ஐசிசியிடம் கடிதம் கேட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் கடும் கோபமடைந்த உச்ச நீதிமன்றம், கடந்த ஜனவரியில் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குரை தகுதி நீக்கம் செய்ததோடு, நீதிமன்றத்துக்கு தவறான தகவலை அளித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும். இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என எச்சரித்தது.

இது தொடர்பான வழக்கை கடந்த 7-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், அப்போது அனுராக் தாக்குர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாணப் பத்திரத்தை ஏற்க மறுத்ததோடு, ஒரு பக்க அளவிலான பிரமாணப் பத்திரத்தில் அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணை ஜூலை 14-ஆம் தேதி (இன்று) நடைபெறும்போது அனுராக் தாக்குர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அனுராக் தாக்குர் கூறியிருப்பது:

“உச்ச நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் நோக்கம் எதுவும் எனக்கு கிடையாது. எவ்வித நோக்கமும் இன்றி தவறான தகவல்களை அளித்ததற்காக எவ்வித தயக்கமும் இன்றி இந்த நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

நியூசிலாந்து அணியில் வேலூர் இளைஞர்.. ரஜினியின் வெறித்தனமான ரசிகர்.. யார் இந்த ஆதித்யா அசோக்!
IND vs NZ: கடைசி நேரத்தில் அதிரடி வீரர் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு.. அட! மாற்று வீரர் இவரா?