இந்திய அணிக்கு எதிராக ஆண்டர்சன் எட்டிய புதிய மைல்கல்!!

By karthikeyan VFirst Published Aug 19, 2018, 3:37 PM IST
Highlights

இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியின் சீனியர் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். 

இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியின் சீனியர் பவுலர் ஆண்டர்சன் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். 

இங்கிலாந்து அணியின் சீனியர் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன். கடந்த 2003ம் ஆண்டிலிருந்து 15 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியில் ஆடிவரும் ஆண்டர்சன், 141 டெஸ்ட் போட்டிகளில் ஆடி(இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் சேர்த்து) 554 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் ஆண்டர்சன். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில், முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே மற்றும் மெக்ராத்துக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தில் ஆண்டர்சன் உள்ளார். 

இங்கிலாந்தில் நடந்துவரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பாக பந்துவீசிவருகிறார் ஆண்டர்சன். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளையும் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற ஆண்டர்சனின் பந்துவீச்சு மிக முக்கிய காரணம். 

இந்நிலையில், நாட்டிங்காமில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்டத்தில் ஆண்டர்சன் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை மட்டும் ஆண்டர்சன் வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமையை ஆண்டர்சன் பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் முத்தையா முரளிதரனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார் ஆண்டர்சன். முரளிதரன், இந்திய அணிக்கு எதிராக 105 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பவுலர்கள்:

1. முத்தையா முரளிதரன்(இலங்கை) - 105 விக்கெட்டுகள்

2. ஜேம்ஸ் ஆண்டர்சன்*(இங்கிலாந்து) - 100 விக்கெட்டுகள்

3. இம்ரான் கான்(பாகிஸ்தான்) - 94 விக்கெட்டுகள்

4. மார்ஷல் (வெஸ்ட் இண்டீஸ்) - 76 விக்கெட்டுகள்
 

click me!