
தால் நினைவு சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 3-ஆவது இடத்தைப் பிடித்தார்.
>
> ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் 9-ஆவது மற்றும் கடைசி சுற்றில் ஆனந்த், ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியனுடன் டிரா செய்தார். இதன்மூலம் இந்தத் தொடரில் 6-ஆவது டிராவைப் பதிவு செய்தார் ஆனந்த்.
>
> ரஷியாவின் இயான் நெபோம்நியாக்ஷி, இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டுடன் டிரா செய்தார். இதன்மூலம் நெபோம்நியாக்ஷி 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
>
> இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நெதர்லாந்தின் அனிஷ் கிரி, தனது கடைசிச் சுற்றில் சீனாவின் லீ சாவுடன் டிரா செய்தார். இதனால் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட கிரி, 5.5 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தைப் பிடித்தார்.
>
> ஆனந்த், லெவோன் ஆரோனியன் ஆகியோர் தலா 5 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தையும், ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக், பீட்டர் ஸ்விட்லர், அஜர்பைஜானின் ஷக்ரியார், சீனாவின் லீ சாவ் ஆகியோர் தலா 4.5 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தையும் பிடித்தனர்.
>
> ரஷியாவின் டோமாஷேவ்ஸ்கை 3.5 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தையும், இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்ட் இரு புள்ளிகளுடன் கடைசி இடத்தையும் பிடித்தனர். கெல்ஃபான்ட் ஒரு வெற்றியைக்கூட பெறவில்லை. அவர் 4 தோல்விகளையும், 5 டிராவையும் பதிவு செய்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.