
ஒருநாள் கிரிக்கெட்டில் ஆக்ரோஷமாக அணியாக இங்கிலாந்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். எனவே அடுத்த உலக கோப்பையை இங்கிலாந்து அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு கருதுகிறார்.
அடுத்த ஆண்டு உலக கோப்பை இங்கிலாந்தில் நடக்க இருக்கிறது. மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை உலக கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.
அதனால் அடுத்த ஆண்டு நடக்கும் உலக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்த அணிகள் உள்ளன. தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றது, அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. அதேநேரத்தில் இயன் மோர்கன் தலைமையில் இங்கிலாந்து சிறந்த ஒருநாள் அணியாக வளர்ந்து வருகிறது.
இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு, அடுத்த ஆண்டு உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என ஆருடம் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக பேசிய அவர், இங்கிலாந்து அணியை இதுவரை இல்லாத அளவிற்கு ஆக்ரோஷமான ஒருநாள் அணியாக மாற்றிவருகிறார் அந்த அணியின் கேப்டன் இயன் மோர்கன். அத்துடன் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். எனவே உலக கோப்பையில் இங்கிலாந்து அணி நீண்ட தூரம் செல்லும். இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்வதற்கு ஒரு வாய்ப்பு உண்டு என்றால், அது 2019 உலக கோப்பையாக இருக்கும் என ஆலன் டொனால்டு தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.