
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் முதல்நாள் முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 374 ஓட்டங்கள் எடுத்து அசத்தியுள்ளது.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நேற்று தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக தமிம் இக்பால் - இம்ருல் கயஸ் களம் கண்டனர்.
இதில் தமிம் இக்பால் அரைசதம் கடந்து 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 52 ஓட்டங்கள் எடுத்து தில்ருவன் பெரேரா பந்துவீச்சில் போல்டானார்.
அவருடன் வந்த இம்ருல் 4 பவுண்டரிகள் உள்பட 40 ஓட்டங்கள் எடுத்த நிலையில் லக்ஷன் சன்டகன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி நடையைக் கட்டினார்.
உணவு இடைவேளையின்போது வங்கதேசம் 27.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து வந்த மோமினுல் ஹக் - முஷ்பிகர் ரஹிம் இணை அற்புதமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இந்த இணை 3-வது விக்கெட்டுக்கு 236 ஓட்டங்கள் குவித்தது.
சதத்தை நெருங்கிய முஷ்பிகர் ரஹிம் 10 பவுண்டரிகள் உள்பட 92 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சுரங்கா லக்மல் பந்துவீச்சில், கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்த பக்கத்தில் மோமினுல் 96 பந்துகளில் சதம் கடந்து நிலைக்க, முஷ்பிகரை அடுத்து வந்த லிட்டன் தாஸை டக் அவுட் ஆக்கினார் லக்மல். அதற்குள் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
மோமினுல் ஹக் 175 ஓட்டங்கள் , கேப்டன் மஹ்முதுல்லா 9 ஓட்டங்களுடன் ஆடி வருகின்றனர்.
இலங்கை தரப்பில் சுரங்கா லக்மல் 2 விக்கெட்கள், தில்ருவன் பெரேரா மற்றும் லக்ஷன் சன்டகன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
அதன்படி, முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் முதல்நாள் முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 374 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.