
வெளிநாடுகளில் டெஸ்ட், ஒரு நாள், டி20 ஆகிய மூன்று வகைகளில் ஏதாவது ஒன்றில் மட்டும் பங்கேற்பது சிறப்பானதாக இருக்கும் என்று இந்திய அணியின் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
டெஸ்ட் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், ஒரு நாள் போட்டித் தொடர் நாளைத் தொடங்குகிறது. இந்நிலையில், டர்பன் நகரில் செய்தியாளர்களிடம் ரோஹித் சர்மா, "வெளிநாடுகளில் டெஸ்ட், ஒரு நாள், டி20 ஆகிய மூன்று வகைகளில் ஏதாவது ஒன்றில் மட்டும் பங்கேற்பது சிறப்பானதாக இருக்கும் என்று கருதிகிறேன்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அயல் தேச அணி ஏதாவது ஒரு வகையிலான போட்டியில் மட்டுமே பங்கேற்கிறது. அந்தத் தொடரை முடித்துவிட்டு, தங்கள் தேசத்துக்குச் சென்று அவர்கள் ஓய்வெடுத்துவிட்டு பிறகு மீண்டும் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்று போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
எனினும், எந்தெந்த போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை பிசிசிஐ நிர்வாகமே முடிவு செய்ய வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.