
நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி பிரான்ஸின் நிக்கோலஸ் மஹத், பியர் – ஹியுஸ் ஹெர்பெர்ட் ஜோடியுடன் மோதியது.
இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மழை: தானாக சிக்கிய பிசிசிஐ!
இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-3), 6-2 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலமாக 13 ஆண்டுகளுக்குப் பிறகு ரோகன் போபண்ணா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதற்கு முன்னதாக, காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் போபண்ணா – ஆஸ்திரேலியாவின் மேத்யூ எம்டன் ஜோடி, அமெரிக்காவின் நதானியேல் லாம்மன்ஸ் - ஜாக்சன் வித்ரோ ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபண்ணா ஜோடி 7-6, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்க ஜோடியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.