குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் 5 பேர் அரையிறுதிக்கு முன்னேற்றம்... 

 
Published : Apr 24, 2018, 10:29 AM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் 5 பேர் அரையிறுதிக்கு முன்னேற்றம்... 

சுருக்கம்

5 Indian boxers in the boxing championship progressed to semi-final ...

ஆசிய இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஐவர் அரையிறுதிக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.

ஆசிய இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில், மகளிருக்கான காலிறுதியில் 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அனாமிகா, மங்கோலியாவின் மன்குசரன் பால்சானை வீழ்த்தினார். 

அதேபோன்று 75 கிலோ எடைப் பிரிவில்  இந்தியாவின் ஆஸ்தா பவா, சீனாவின் ஜியு வாங்கை வென்றார்.

மற்றொரு பிரிவான 69 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் லலிதா, வியத்நாமின் தி கியாங் டிரானை வீழ்த்தினார்.

54 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் திவ்யா பவார்  - சீனாவின் ஜியுகிங் காவை வீழ்த்தினார். 

48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் நீது கங்காஸ் - சீனாவின் ஜிஃபெய் ஹுவையும் தோற்கடித்தார். 

இதில், அனாமிகா மற்றும் ஆஸ்தா ஆகியோர், இந்த ஆண்டு ஆர்ஜென்டீனாவில் நடைபெறவுள்ள இளையோர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை நெருங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

3 பார்மேட்டிலும் சதம்.. புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 6வது இந்தியர் ஆனார்
Ind Vs SA: இந்திய அணி மிரட்டல் அடி..! இமாலய வெற்றி.. தொடரை கைப்பற்றி அசத்தல்..