ஊக்கமருந்து விவகாரத்தில் தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் தடை

Published : Aug 02, 2022, 05:34 PM IST
ஊக்கமருந்து விவகாரத்தில் தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் தடை

சுருக்கம்

ஊக்கமருந்து விவகாரத்தில் தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்துவருகிறது. காமன்வெல்த்தில் கலந்துகொண்டுள்ள இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை வென்றுவருகின்றனர்.

பர்மிங்காம் காமன்வெல்த்தில் 100மீ ஓட்டம் மற்றும் 4*100மீ தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் கலந்துகொள்ளவிருந்த தமிழகத்தை சேர்ந்த தனலட்சுமி ஊக்கமருந்து எடுத்துக்கொண்டது பரிசோதனையில் தெரியவந்ததால், காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் ஊக்கமருந்து உட்கொண்டதை ஒப்புக்கொண்டதால் அவருக்கு 4 ஆண்டுகள் விதிக்கப்படவிருந்த தடை, 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. ஊக்கமருந்து எடுத்துக்கொண்டதற்காக 3 ஆண்டுகள் தனலட்சுமிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழக தடகள வீரர் மகிமைராஜுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

டி20 உலகக்கோப்பை.. கை நழுவும் கேட்ச்கள்.. இந்தியாவின் பீல்டிங் மோசம்.. ஜாம்பவான் கவலை!
சஞ்சு சாம்சன் அரையிறுதியில் விளையாட தடையா? வெற்றி கொண்டாட்டத்தால் வந்த வினை.. ரசிகர்கள் ஷாக்!