தமிழகத்தைச் சேர்ந்த சவிதா ஸ்ரீ இந்தியாவின் 25ஆவது பெண் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார்
இந்தியாவில் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் , நேற்று நடந்த இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சவீதா ஸ்ரீ, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த எரிக் ஹெட்மேன் உடன் மோதினார். இந்தப் போட்டியில் சவீதா ஸ்ரீ வெற்றி பெறவே அவர் இந்தியாவின் 25ஆவது கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்றார். இளம் வயதில் அதுவும் தனது 16ஆவது வயதில் 25ஆவது பெண் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக தமிழகத்தைச் சேர்ந்த ரஷீதா ரவி 24ஆவது பெண் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் வெற்றியை பதிவு செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி… 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!!
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஜூனியர் கேர்ள்ஸ் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக அவர் கிராண்ட் மாஸ்டர் தகுதிக்கு முதல் வெற்றியை பெற்றார். அதன் பிறகு 2ஆவது வெற்றியை பெற்றதன் மூலம் 2300 புள்ளிகள் பெற்றார். ஆனால், கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற 2500 புள்ளிகளை பெற வேண்டும். இந்த நிலையில் தான் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த எரிக் ஹெட்மேன் உடன் நடந்த செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் 25ஆவது பெண் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.