t20 world cup 2022: டி20 உலகக் கோப்பை 100 நாட்கள் கவுன்ட் டவுன் தொடங்கியது: 4 கண்டங்களுக்கும் கோப்பை பயணம்

Published : Jul 08, 2022, 06:18 PM IST
t20 world cup 2022: டி20 உலகக் கோப்பை 100 நாட்கள் கவுன்ட் டவுன் தொடங்கியது: 4 கண்டங்களுக்கும்  கோப்பை பயணம்

சுருக்கம்

டி20 உலகக் கோப்பையின் 100 நாட்கள் கவுன்ட் டவுன் இன்று தொடங்கியது. 13 நாடுகளில் உள்ள 35 இடங்களுக்குச் சென்றுவிட்டு அக்டோபர் 16ம் தேதி ஜீலாங் நகரை சென்றடையும்

டி20 உலகக் கோப்பையின் 100 நாட்கள் கவுன்ட் டவுன் இன்று தொடங்கியது. 13 நாடுகளில் உள்ள 35 இடங்களுக்குச் சென்றுவிட்டு அக்டோபர் 16ம் தேதி ஜீலாங் நகரை சென்றடையும்

டி20 உலகக் கோப்பைப் போட்டி இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ம் தேதி தொடங்கி, நவம்பர் 13ம் தேதி வரை நடக்கிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 45 ஆட்டங்கள் நடக்கின்றன. 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த உலகக் கோப்பை கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.

தற்போது டி20 சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியாதான் போட்டித் தொடரை நடத்துகிறது. சாம்பியனாகஇருந்துகொண்டே டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா நடத்துவது இதுதான் முதல்முறை

 

இன்று புறப்படும் டி20 உலகக் கோப்பை, முதல் முறையாக பிஜி, பின்லாந்து, ஜெர்மனி, கானா, இந்தோனேசியா, நமிபியா, நேபாளம், சிங்கப்பூர், வனூட்டு ஆகிய நாடுகளுக்கு செல்கிறது. மொத்தம் 13 நாடுகளில் 35 இடங்களில் காட்சிக்காக கோப்பை வைக்கப்படுகிறது. 

100 நாட்கள் கவுன்ட் டவுனைக் குறிக்கும் வகையில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திலிருந்து இந்த கோப்பை புறப்படுகிறது. ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச், ஜார்ஜியா வார்ஹம், டைலா விலாம்னிக், ஷேன் வாட்ஸன், வக்கர்யூனுஸ், மோர்ன் மோர்கல் உள்ளிட்ட பல வீரர்கள் ஐசிசி கோப்பை பயணத்தை தொடஹ்கி வைக்கிறார்கள் 

 

ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி ஜெப்அலார்டைஸ் கூறுகையில் “ ஐசிசி டி20 உலகக் கோப்பை  போட்டித் தொடரை கொண்டாடும் வகையில் கவுன்ட்டவுன் இன்று தொடங்குகிறது. முதல்முறையாகக கோப்பை 13 நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இன்னும் போட்டித் தொடருக்கு 100 நாட்கள் மட்டுமே உள்ளன” எனத் தெரிவித்தார்

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2027-ல் இந்தியாவுக்கு மரண அடி காத்திருக்கு.. ODI உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவது உறுதி.. பாக். கேப்டன் சபதம்
Sanju Samson: மைதானத்தில் சஞ்சுவின் ஆட்டம்.. கேலரியில் சாருவின் ஆரவாரம்..! இதுவல்லவோ கெமிஸ்ட்ரி..!