
ஜிம்பாப்வே அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் 296 ரன்கள் அடித்தும் கூட, ஜிம்பாப்வே அணி அந்த இலக்கை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கையிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
2வது ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் ஆடியது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் நன்றாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுகு 59 ரன்களை சேர்த்து கொடுத்தனர்.
3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் எர்வினும் சீன் வில்லியம்ஸும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 106 ரன்களை குவித்தனர். சீன் வில்லியம்ஸ் 48 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அபாரமாக விளையாடிய கேப்டன் எர்வின் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்து 9 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.
பின்வரிசையில் சிறப்பாக ஆடிய சிக்கந்தர் ராஜா அரைசதம் அடித்தார். சிக்கந்தர் 56 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 302 ரன்களை குவித்த ஜிம்பாப்வே அணி, 303 ரன்களை இலங்கைக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
இது நல்ல ஸ்கோர் தான் என்றாலும், இலங்கை கண்டிஷனில் அந்த அணிக்கு இது கடினமான இலக்கு அல்ல. சவாலான இலக்குதான். ஆனாலும் இலங்கை இதை அடித்துவிடும்.