பின்வரிசை வீரர்கள் ஷும்பா - ரியான் பர்ல் அதிரடி பேட்டிங்.. அயர்லாந்துக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த ஜிம்பாப்வே

Published : Aug 29, 2021, 06:32 PM IST
பின்வரிசை வீரர்கள் ஷும்பா - ரியான் பர்ல் அதிரடி பேட்டிங்.. அயர்லாந்துக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த ஜிம்பாப்வே

சுருக்கம்

அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் மில்டன் ஷும்பா - ரியான் பர்லின் பொறுப்பான பேட்டிங்கால், சரிவிலிருந்து மீண்ட ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 152 ரன்களை குவித்து 153 ரன்கள் என்ற சவலான இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.  

ஜிம்பாப்வே அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. 2வது போட்டி இன்று நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி, 10 ஓவரில் 64 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

அதன்பின்னர் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மில்டன் ஷும்பா  மற்றும் ரியான் பர்ல் ஆகிய இருவரும் பொறுப்புடன் விக்கெட்டை இழந்துவிடாமல் கவனமாக ஆடிய அதேவேளையில், அடித்தும் ஆடினர். ஷும்பா - பர்ல் ஆகிய இருவருமே அடித்து ஆடி ஸ்கோரை வேகமாக உயர்த்தினர்.

ஷும்பா 27 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 46 ரன்களையும், பர்ல் 33 பந்தில் 37 ரன்களையும் அடிக்க, 20 ஓவரில் 152 ரன்களை அடித்து 153 ரன்கள் என்ற சவாலான இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது ஜிம்பாப்வே அணி.
 

PREV
click me!

Recommended Stories

இஷான் கிஷன் ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. முதல் SMAT பட்டத்தை வென்று ஜார்க்கண்ட் சாதனை..!
சுப்மன் கில் காயம்.. 5வது T20 போட்டியில் விலகல்.. அதிரடி மன்னன் சேர்ப்பு.. இந்திய அணி பிளேயிங் லெவன்!