#ENGvsIND அவரை இந்திய அணியில் சேர்க்க இனியும் லேட் பண்ணக்கூடாது.! அடுத்த மேட்ச்சில் கண்டிப்பா சேர்த்தே தீரணும்

By karthikeyan VFirst Published Aug 29, 2021, 5:52 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை சேர்க்க இனியும் தாமதிக்கக்கூடாது என்று முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும், 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. 

இந்த தொடரில் இந்திய அணியின் பெரிய பிரச்னையாக இருப்பது மிடில் ஆர்டர் பேட்டிங் தான். புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் பண்ட் ஆகிய 4 வீரர்களுமே மிடில் ஆர்டரில் தொடர்ந்து சொதப்பிவருவது இந்திய அணிக்கு பெரும் பிரச்னையாக அமைந்துள்ளது.

மயன்க் அகர்வால், சூர்யகுமார் யாதவ், ஹனுமா விஹாரி ஆகிய சிறந்த வீரர்கள் சிலர் பென்ச்சில் உள்ளனர். சீனியாரிட்டியை எல்லாம் கருத்தில்கொள்ளாமல் ஃபார்மின் அடிப்படையில் வீரர்களை ஆடும் லெவனில் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது.

இந்நிலையில், பென்ச்சில் இருக்கும் சூர்யகுமார் யாதவை அணியில் சேர்க்க இனியும் தாமதிக்கக்கூடாது. அவரை 4வது டெஸ்ட்டில் ஆடவைக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திலீப் வெங்சர்க்கார், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு சூர்யகுமார் யாதவை கண்டிப்பாக அணியில் சேர்க்க வேண்டும். ஒரு பவுலரை நீக்கிவிட்டு கூடுதல் பேட்ஸ்மேனை சேர்க்க வேண்டும். சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் சேர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனியும் அவரை அணியில் சேர்க்க தாமதிக்கக்கூடாது என்று வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.

click me!