AUS vs ZIM 3வது ODI: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த ஜிம்பாப்வே

By karthikeyan VFirst Published Sep 3, 2022, 3:29 PM IST
Highlights

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை முதல் முறையாக வீழ்த்தி ஜிம்பாப்வே அணி வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
 

ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இந்த தொடரின் முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், 3வது ஒருநாள் போட்டி இன்று டவுன்ஸ்வில்லேவில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி ஃபீல்டிங் தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் ஃபின்ச் (5), ஸ்மித்(1), அலெக்ஸ் கேரி (4), மார்கஸ் ஸ்டோய்னிஸ்(3), க்ரீன் (3), மேக்ஸ்வெல்(19), அஷ்டான் அகர் (0) என அனைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும் படுமட்டமாக பேட்டிங் ஆடி தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு..! தூக்கி எறியப்பட்ட பேர்ஸ்டோ, ராய்

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடிய டேவிட் வார்னர் சதத்தை நெருங்கிய நிலையில், வார்னரை 94 ரன்களுக்கு வீழ்த்திய ரியான் பர்ல், அடுத்ததாக ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட்டையும் வீழ்த்த 31 ஓவரில் வெறும் 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலிய அணி. அபாரமாக பந்துவீசிய ஜிம்பாப்வே வீரர் ரியான் பர்ல் 3 ஓவரில் 10 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 142 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணி, 39 ஓவரில் இலக்கை அடித்து வெற்றி பெற்றது. ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல்  வெற்றியை பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்தது ஜிம்பாப்வே அணி. 

இதையும் படிங்க - Asia Cup: இர்ஃபான் பதான் சாதனையை தகர்த்து முதலிடம் பிடித்தார் ரவீந்திர ஜடேஜா..!

ஆஸ்திரேலிய அணி 2-1 என ஒருநாள் தொடரை வென்றிருந்தாலும், ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் ஜிம்பாப்வேயிடம் முதல் தோல்வியை அடைந்தது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ரியான் பர்லும், தொடர்நாயகனாக ஆடம் ஸாம்பாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
 

click me!