விக்கெட் போட முடியாமல் திணறும் பும்ராவுக்கு ஜாகீர் கானின் ஆலோசனை

By karthikeyan VFirst Published Feb 13, 2020, 5:26 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் பும்ராவுக்கு முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஜாகீர் கான் ஆலோசனை தெரிவித்துள்ளார்.  
 

பும்ரா இந்திய அணிக்கு வந்த பிறகுதான், இந்திய அணி பவுலிங்கில் தலைசிறந்து விளங்க தொடங்கியது. பும்ராவின் வருகைக்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணி ஃபாஸ்ட் பவுலிங்கில் தலைநிமிர்ந்தது. பும்ரா, ஷமி ஆகிய இருவரும் மூன்றுவிதமான போட்டிகளிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்து இந்திய அணிக்கு வெற்றிகளை தேடித்தந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் பெரும்பாலான விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவதால், மற்ற பவுலர்கள் கூட்டத்தோடு கோவிந்தா போட்டு போய்விடுகின்றனர். 

இந்நிலையில், காயத்தால் சில தொடர்களில் ஆடமுடியாத பும்ரா, காயத்திலிருந்து மீண்டு, இலங்கைக்கு எதிரான தொடரில் மீண்டும் அணியில் இடம்பிடித்தார். காயத்திலிருந்து மீண்டுவந்தபிறகு, அவரது பவுலிங் முன்புபோல் இல்லை. 

இந்திய அணிக்கு விக்கெட் தேவைப்படும்போதெல்லாம், அதை வீழ்த்தி கொடுக்கவல்ல பும்ரா, நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. பொதுவாக ரன்னை அதிகமாக கொடுக்காமல், எதிரணியை வெகுவாக கட்டுப்படுத்தவல்ல பும்ரா, இந்த தொடரில் மூன்று போட்டிகளிலுமே 50 ரன்களுக்கு மேல் வழங்கினார். பும்ராவின் பவுலிங்கில் நியூசிலாந்து வீரர்கள் விக்கெட்டை இழக்காதது மட்டுமல்லாமல், அவரது பவுலிங்கை அடியும் வெளுத்துவிட்டனர். பும்ராவின் கெரியரில் முதல் முறையாக 3 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாமல் இருந்திருக்கிறார்.

பும்ராவின் பவுலிங் எடுபடாததுதான் நியூசிலாந்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம். இந்நிலையில், பும்ராவுக்கு ஜாகீர் கான் ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஜாகீர் கான், பும்ரா கடந்த சில ஆண்டுகளாக அபாரமாக பந்துவீசி, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் வீசும் 10 ஓவரில் வெறும் 35 ரன்கள் அடித்தால் கூட போதும். ஆனால் அவரிடம் விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்ற நிலைக்கு எதிரணியினர் வந்துவிட்டனர். பும்ராவின் பவுலிங்கை விட்டுவிட்டு மற்ற பவுலர்களை டார்கெட் செய்து அடிக்கும் முனைப்பில் உள்ளனர். எனவே பும்ரா, இனிமேல் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்றால், கூடுதல் ஆக்ரோஷத்துடன் வெறித்தனமாக வீச வேண்டும் என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.

Also Read - கேப்டன் கோலியை கொஞ்சம் கூட மதிக்காத ஆர்சிபி நிர்வாகம்.. டிவில்லியர்ஸ், சாஹல் அதிர்ச்சி

பும்ராவின் பவுலிங்கை அடித்து ஆடாமல், நிதானமாக கையாளும் எண்ணம் கொண்ட வீரர்களையும் வீழ்த்த வேண்டும் என்றால், கூடுதல் ஆக்ரோஷத்துடன் வீசினால் மட்டுமே முடியும் என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். 
 

click me!