ஹர்திக் பாண்டியாவின் காயத்தால் அவரை விட அதிகமாக பாதிக்கப்பட்டது நானும் குல்தீப்பும் தான் - சாஹல்

By karthikeyan VFirst Published May 21, 2021, 6:38 PM IST
Highlights

ஹர்திக் பாண்டியாவின் காயத்தால் தான், தானும் குல்தீப்பும் இந்திய அணியில் இடத்தை இழந்ததாக யுஸ்வேந்திர சாஹல் கூறியுள்ளார்.
 

2017ம் ஆண்டிலிருந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் முதன்மை ஸ்பின் ஜோடியாக திகழ்ந்தனர் குல்தீப்பும் சாஹலும். ரிஸ்ட் ஸ்பின் ஜோடியான குல்தீப் - சாஹல்  ஜோடி, அபாரமாக பந்துவீசி மிடில் ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தனர்.

ஆனால் 2019 உலக கோப்பைக்கு பின்னர் குல்தீப்பும் சாஹலும் இணைந்து இந்திய அணிக்காக ஆடவேயில்லை. இருவரில் ஒருவர் தான் ஆடும் லெவனில் இடம்பெற்றார். அதுவும் அதிகமாக சாஹலாகத்தான் இருந்தாரே தவிர, குல்தீப்பிற்கு பெரிதாக வாய்ப்பே கிடைக்கவில்லை. ஸ்பின் ஆல்ரவுண்டர் என்ற வகையில் அதிரடி பேட்டிங் ஆடி ஃபினிஷிங் ரோலையும் செய்யக்கூடிய ஜடேஜா முதன்மை ஸ்பின்னராக ஆடுகிறார்.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள சாஹல், நானும் குல்தீப்பும் இணைந்து ஆடமுடியாமல் போனதற்கு ஹர்திக் பாண்டியாவின் காயம் தான் காரணம். ஹர்திக் பாண்டியா ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக ஆடியவரை, நான் மற்றும் குல்தீப் ஆகிய இருவருமே அணியில் வாய்ப்பு பெற்றோம். ஆனால் 2018ல் பாண்டியா காயத்தால் வெளியேறிய நிலையில், ஆல்ரவுண்டராக ஜடேஜா மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுத்தார். அவர் ஸ்பின் ஆல்ரவுண்டராக இருந்தது தான் எங்களுக்கு பிரச்னையாக அமைந்துவிட்டது.

அணி காம்பினேஷனில் 7ம் வரிசையில் பேட்டிங் ஆடும் ஆல்ரவுண்டர் தேவைப்பட்டது. ஜடேஜா பேட்டிங் ஆட தெரிந்த ஸ்பின்னர் என்றவகையில், அவர் அணியில் இடம்பிடித்தார். அவர் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக இருந்திருந்தால் நானும் குல்தீப்பும் தொடர்ந்து இணைந்து ஆடியிருப்போம். நாங்கள் இணைந்து ஆடுவதை விட அணி வெற்றி பெறுவதுதான் முக்கியம் என்று சாஹல் தெரிவித்தார்.
 

click me!