ஐபிஎல் நிறுத்தப்படலைனா நானே விலகியிருப்பேன் - சாஹல்

By karthikeyan VFirst Published May 21, 2021, 8:22 PM IST
Highlights

ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்படவில்லை என்றால், நானே விலகியிருப்பேன் என்று யுஸ்வேந்திர சாஹல் கூறியுள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் மட்டுமே நடந்த நிலையில், சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், ஐபிஎல் பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எஞ்சிய 31 போட்டிகளை செப்டம்பர் - அக்டோபர் காலக்கட்டத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் நிறுத்தப்படவில்லை என்றால், தானே விலகியிருப்பேன் என்று சாஹல் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஆர்சிபி அணியின் நட்சத்திர ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல், எனது பெற்றோருக்கு கொரோனா என்றதுமே, ஐபிஎல்லில் பிரேக் எடுத்து வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனியாக இருக்கும்போது ஆட்டத்தில் கவனம் செலுத்துவது மிகக்கடினம். என் பெற்றோருக்கு மே 3ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதற்கு 2 நாட்களுக்கு பிறகு ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. 

என் தந்தைக்கு ஆக்ஸிஜன் லெவல் 85-86ஆக குறைந்தது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர், நேற்றுதான் வீடு திரும்பினார். ஆனாலும் அவரது டெஸ்ட் ரிசல்ட் இன்னும் பாசிட்டிவ் என்றுதான் வந்தது. ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால் அவரது ஆக்ஸிஜன் லெவன் அதிகரித்துள்ளது. அவர் குணமடைய இன்னும் 10 நாட்கள் ஆகும் என்றார் சாஹல். 
 

click me!