மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 14ஆவது லீக் போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலமாக ஐபிஎல்லில் அதிக முறை 3 விக்கெட்டுகள் எடுத்த பும்ராவின் (20) சாதனையை சமன் செய்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 14ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆர் ஆர் அணி முதலில் பந்து வீசியது. மும்பை அணியில் இஷான் கிஷான் மற்றும் ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா, நமன் திர், டெவால்ட் பிரேவிஸ் ஆகியோர் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தனர்.
ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி 5ஆவது விக்கெட்டிற்கு 56 ரன்கள் சேர்த்தனர். பாண்டியா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 32 ரன்களில் நடையை கட்டினார். இஷான் கிஷான் 16 ரன்னிலும், டிம் டேவிட் 17 ரன்னிலும் ஆட்டமிழக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் டிரெண்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திர சஹால் தலா 3 விக்கெட்டும், நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த போட்டியில் சஹால், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் ஜெரால்டு கோட்ஸி ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த போட்டியில் சஹால் 3 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 20 முறை 3 விக்கெட்டுகள் கைப்பற்றிய பும்ரா சாதனையை சமன் செய்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை 3 விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள்:
20 – ஜஸ்ப்ரித் பும்ரா
20 – யுஸ்வேந்திர சஹால்*
19 – லஷித் மலிங்கா
17 – அமித் மிஸ்ரா