மானத்த காபாத்திய திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா – மும்பை இந்தியன்ஸ் சோலிய முடிச்ச போல்ட், சஹால்!

Published : Apr 01, 2024, 09:47 PM ISTUpdated : Apr 01, 2024, 09:50 PM IST
மானத்த காபாத்திய திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா – மும்பை இந்தியன்ஸ் சோலிய முடிச்ச போல்ட், சஹால்!

சுருக்கம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 14ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

மும்பையின் கோட்டையான வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 14ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. இதில், இஷான் கிஷான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

முதல் ஓவரை டிரெண்ட் போல்ட் வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் ரோகித் சர்மா கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே நமன் திர்ரும் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, முதல் ஓவர் முடிவில் இம்பேக்ட் பிளேயராக வந்த டெவால்ட் பிரேவிஸ் 3ஆவது ஓவரில் டிரெண்ட் போல்ட் பந்தில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.

நான்காவது ஓவரில் இஷான் கிஷான் விக்கெட்டை நந்த்ரே பர்கர் கைப்பற்றினார். இஷான் கிஷான் 14 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸ் 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பிறகு திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர். இதில் கேப்டன் ஹர்திக் பாண்டியா சகால் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 6 பவுண்டரி மட்டுமே எடுத்து 34 ரன்கள் சேர்த்தார்.

இவரைத் தொடந்து பியூஷ் சாவ்லா 3 ரன்களில் ஆவேஷ் கான் பந்தில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 29 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிம் டேவிட் 17 ரன்கள் எடுக்க, ஜெரால்டு கோட்ஸி 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டிரெண்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திர சகால் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026: மும்பைக்கு அதிர்ச்சி கொடுத்த KKR... பிளேஆஃப் ரேஸில் கொல்கத்தா... அந்த 4வது இடம் யாருக்கு?
Virat Kohli Mental Health: 'நான் ஒரு போலி'னு தோணுது! - மனநலம் பற்றி கோலி ஓபன் டாக்