தாதா, இப்ப நீங்க பிசிசிஐ தலைவர்.. கொஞ்சமாவது ப்ரொஃபசனலா இருங்க.. யுவராஜின் கிண்டலான கோரிக்கை

Published : Feb 14, 2020, 04:01 PM IST
தாதா, இப்ப நீங்க பிசிசிஐ தலைவர்.. கொஞ்சமாவது ப்ரொஃபசனலா இருங்க.. யுவராஜின் கிண்டலான கோரிக்கை

சுருக்கம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலிக்கு யுவராஜ் சிங் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.   

இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. சூதாட்டப்புகாரில் சிக்கி சின்னாபின்னமாகியிருந்த இந்திய அணியை இளம் வீரர்களை கொண்டு சிறந்த அணியாக உருவாக்கி, வளர்த்தெடுத்தவர் கங்குலி. கங்குலி வெற்றியை விரும்பும் ஆக்ரோஷமான கேப்டன். 

களத்தில் ஆக்ரோஷமாக செயல்படக்கூடியவர். மிகவும் நேர்மையான, வெளிப்படைத்தன்மையான மற்றும் துணிச்சலான நபர், வீரர், கேப்டன். கங்குலியால் வளர்ந்தவர்கள் தான் சேவாக், யுவராஜ், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், தோனி ஆகியோர். 

எதிரணி வீரர்களுக்கு அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுப்பதில் வல்லவர் கங்குலி. கங்குலி ஆக்ரோஷமான, துணிச்சலான கேப்டனாகவும் வீரராகவும் இருந்து இந்திய கிரிக்கெட்டிற்கு பங்களிப்பு செய்து ஓய்வுபெற்ற நிலையில், தற்போது பிசிசிஐயின் தலைவராக இருந்து இந்திய கிரிக்கெட்டுக்கு பங்களிப்பு செய்துவருகிறார். 

Also Read - நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்.. ஓபனிங் பேட்ஸ்மேனாக சர்ப்ரைஸ் தேர்வு

இந்நிலையில், கங்குலி தனது முதல் டெஸ்ட் சதமடித்த தினத்தின் நினைவாக, அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். 1996ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் தான் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதில், புகைப்பட நிறுவனத்தின் வாட்டர் மார்க்கை நீக்காமல், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அந்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். 

அதைக்கண்ட யுவராஜ் சிங், கங்குலி, வாட்டர் மார்க்குடன் அந்த புகைப்படத்தை பதிவிட்டிருந்ததை சுட்டிக்காட்டி, தாதா, நீங்கள் இப்போது பிசிசிஐ தலைவர். எனவே கொஞ்சமாவது ப்ரொஃபசனலாக நடந்துகொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!
T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு