ஐபிஎல்லில் அந்த அணியில் நான் ஆடியிருக்க வேண்டியது.. ஆனால் முடியாம போச்சு.. யுவராஜ் சிங் வருத்தம்

By karthikeyan VFirst Published Jul 10, 2019, 12:32 PM IST
Highlights

ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், புனே அணி, டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் என 6 அணிகளில் ஆடியுள்ளார். 

இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங், கடந்த 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதையடுத்து அண்மையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றிலிருந்து ஓய்வு பெற்றார். 

2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகிய இரண்டையும் இந்திய அணி வென்றபோது அந்த தொடர்களில் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு அளப்பரியது. யுவராஜ் சிங்கின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை வெற்றிகரமானதாகவே அமைந்தது. 

ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், புனே அணி, டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் என 6 அணிகளில் ஆடியுள்ளார். தோனி, கோலி, ரோஹித் சர்மா போன்று ஒன்று அல்லது இரண்டு அணிகளில் தன்னால் செட்டில் ஆக முடியாதது குறித்த வருத்தத்தை யுவராஜ் சிங் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள யுவராஜ் சிங், ஐபிஎல்லில் நான் ஆடிய அணிகளில் ஒன்று அல்லது இரண்டு அணிகளில் என்னால் செட்டில் ஆக முடியவில்லை. 2014ல் கிட்டத்தட்ட என்னை கேகேஆர் அணி எடுத்துவிட்டது. ஆனால் அந்த ஏலத்தில் கடைசியில் என்னை ஆர்சிபி அணி எடுத்தது. நான் ஆர்சிபி அணிக்காக ஆடினேன். ஆர்சிபி அணியில் ஆடியது மகிழ்ச்சிதான். ஆனால் கேகேஆர் அணியில் நான் ஆடமுடியாமல் போனது துரதிர்ஷ்டம் தான். அதனால் நான் ஆர்சிபி அணியில் ஆடியதையோ கேகேஆர் அணியில் ஆடமுடியாமல் போனதையோ ஒரு குறையாக சொல்லவில்லை. ஆனாலும் கேகேஆர் அணியில் ஆடமுடியாதது துரதிர்ஷ்டம் தான். சன்ரைசர்ஸ் அணி 2016ல் ஐபிஎல் கோப்பையை வென்றபோதும், மும்பை இந்தியன்ஸ் அணி 2019ல் ஐபிஎல் கோப்பையை வென்றபோதும் அந்த அணிகளில் இருந்தது நல்ல அனுபவம் மற்றும் மகிழ்ச்சி என்று யுவராஜ் தெரிவித்தார். 
 

click me!