Yashasvi Jaiswal: இங்கிலாந்து பவுலர்களை கதற விட்ட ஜெய்ஸ்வால்! அதிரடி சதம் விளாசி புதிய சாதனை!

Published : Jun 20, 2025, 09:35 PM ISTUpdated : Jun 20, 2025, 09:38 PM IST
Yashasvi Jaiswal

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசியுள்ளனர். ரசிகர்கள் அவரை பாராட்டித் தள்ளி வருகின்றனர்.

Yashasvi Jaiswal Scores Century Against England: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி வலுவனா நிலையில் உள்ளது. தொடக்க இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து மண்ணில் முதல் சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் இன்று தொடங்கியது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுல் சூப்பர் தொடக்கம் கொடுத்தனர்.

இந்திய அணி வலுவான தொடக்கம்

இந்திய அணி 24.1 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்திருந்தபோது கே.எல்.ராகுல் 78 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்து பிரைடன் கார்ஸ் பந்தில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் லெக் சைடுக்கு வெளியே சென்ற பந்தை தேவையில்லாமல் அடித்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

சூப்பர் சதம் விளாசிய ஜெய்ஸ்வால்

இதனால் இந்திய அணி 92/2 என தவித்த நிலையில், ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சூப்பராக விளையாடினார். தனக்கே உரித்தான ஷாட்களை அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சுப்மன் கில் தொடகக்ம் முதலே அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் இங்கிலாந்து பவுலர்களை கதற விட்ட 23 வயதான ஜெய்ஸ்வால் சூப்பர் சதம் விளாசி அசத்தினார். 144 பந்துகளில் தனது சதத்தை எட்டிய அவர் 16 பவுண்டரி, 1 சிக்சர் விளாசினார். தொடர்ந்து 101 ரன்கள் அடித்த அவர் பென் ஸ்டோக்ஸ் பந்தில் போல்டானார்.

இங்கிலாந்து மண்ணில் முதல் சதம்

இங்கிலாந்து மண்ணில் முதன்முறையாக விளையாடும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் போட்டியிலேயே இங்கிலாந்து மண்ணில் சதம் விளாசி அசத்தியுள்ளார். விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்தியாவின் நம்பகமான பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் மாறியுள்ளார். கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடந்த தொடரில் இரண்டு சதங்களை அடித்த பிறகு, இங்கிலாந்துக்கு எதிரான அவரது மூன்றாவது டெஸ்ட் சதம் இதுவாகும், அங்கு அவர் அதிக ரன்கள் எடுத்த வீரராக இருந்தார்.

இந்திய அணியின் இளம் சூப்பர் ஸ்டார்

சொந்த மண்ணிலும், வெளியிலும் நிலைமைகளுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் ஜெய்ஸ்வால், இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு ஒரு தொடர்ச்சியான தலைவலியாக உருவெடுத்துள்ளார். அற்புதமான சதம் விளாசிய ஜெய்ஸ்வாலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அனைத்துத் தரப்பிலிருந்தும் பாராட்டுச் செய்திகள் குவிந்து வருகின்றன. சிலர் அவரை இளம் சூப்பர் ஸ்டார் என்றும், மற்றவர்கள் அவரை 'மிஸ்டர் கன்சிஸ்டண்ட்' என்றும் அழைத்தனர்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பாராட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்ட பதிவில், ''வெஸ்ட் இண்டீசில் முதல் டெஸ்டில் சதம், ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட்டில் சதம், இங்கிலாந்தில் முதல் டெஸ்ட்டில் சதம்'' என அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது. 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?