ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெறாததற்கான காரணம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தற்போது மொஹாலியில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சுப்மன் கில், ஜித்தேஷ் சர்மா, ஷிவம் துபே, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், திலக் வர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஆனால், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெறவில்லை. நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ரோகித் சர்மாவுடன் இணைந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் தொடக்க வீரராக களமிறங்குவார். அணியில் இடம் பெற்றுள்ள ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய அணியில் இடது மற்றும் வலது காம்பினேஷன் நல்ல பலனை கொடுக்கும் என்று கூறியிருந்தார்.
Tamil Thalaivas: 8 தோல்விகளுக்கு பிறகு வெற்றி – நிம்மதி பெருமூச்சு விட்ட தமிழ் தலைவாஸ்!
ஆனால், இன்றைய போட்டியில் அவர் இடம் பெறவில்லை. இதற்கான காரணம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது குறித்து பிசிசிஐ எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இடுப்பின் வலது பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் டி20 போட்டியில் இடம் பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், திலக் வர்மா, ஷிவம் துபே, ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.