யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய 3 இந்திய வீரர்கள் ஒரே இன்னிங்ஸில் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்தார். பின்னர், வந்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று கேஎல் ராகுல் 86 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மேலும், கடைசி வரை நிதானமாக விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா, 87 ரன்களில் ஆட்டமிழந்தார். சதத்தை நோக்கி சென்ற நிலையில், ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை. இந்த நிலையில் தான் ஒரே இன்னிங்ஸி இந்திய வீரர்கள் 80 ரன்களில் ஆட்டமிழந்துள்ளனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் (80), கேஎல் ராகுல் (86) மற்றும் ரவீந்திர ஜடேஜா (87) ஆகியோரும் சதத்தை நோக்கி சென்ற நிலையில் சதம் அடிக்காமல் ஆட்டமிழந்துள்ளனர்.
இது போன்று ஒரே இன்னிங்ஸில் மூவரும் 80 ரன்களில் ஆட்டமிழப்பது 7ஆவது நிகழ்வாகும். இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது. இந்தியா 436 ரன்கள் குவித்து 190 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து தற்போது இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. மூன்றாம நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழந்து 89 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.