27 வருஷத்துக்கு பிறகு திரும்பிய வரலாறு.. இதெல்லாம் அரிதினும் அரிதான சம்பவம்.. மிஸ் பண்ணிடாம பாருங்க

By karthikeyan VFirst Published Jun 27, 2019, 11:21 AM IST
Highlights

உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு 27 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு திரும்பியுள்ளது. 
 

உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு 27 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு திரும்பியுள்ளது. 

உலக கோப்பை தொடரை பாகிஸ்தான் அணி மோசமாக தொடங்கியது. ஆனால் லீக் சுற்றின் பிற்பாதியில் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவருகிறது. வெஸ்ட் இண்டீஸிடம் முதல் போட்டியிலேயே மரண அடி வாங்கிய பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி கண்டது. அதன்பின்னர் ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளிடம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. 

அதன்பின்னர் சரிவிலிருந்து வெகுண்டெழுந்த பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்த வெற்றியின் மூலம் கிடைத்த உத்வேகத்தில், நியூசிலாந்து அணியையும் வீழ்த்தியது. இந்த உலக கோப்பையில் தோல்வியையே தழுவாமல் இருந்த நியூசிலாந்து அணிக்கு முதல் தோல்வியை பரிசளித்தது பாகிஸ்தான் அணி. 

இதன்மூலம் அரையிறுதி வாய்ப்பை பாகிஸ்தான் அணி தக்கவைத்துள்ளது. எஞ்சிய 2 போட்டிகளிலும் அந்த அணி ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அந்த 2 அணிகளையும் வீழ்த்தும் பட்சத்தில், இங்கிலாந்து அணி எஞ்சிய 2 போட்டிகளில் ஒன்றில் தோற்றால் கூட பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்துவிடும். 

உலக கோப்பை தொடரை மோசமாக தொடங்கி தற்போது அபாரமாக ஆடிவரும் பாகிஸ்தான் அணிக்கு வரலாறு திரும்பியுள்ளது. 1992ம் ஆண்டு இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி உலக கோப்பையை வென்றது. அந்த உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் முதல் 7 போட்டிகளின் முடிவுகளும், இந்த உலக கோப்பையில் அந்த அணியின் முதல் 7 போட்டிகளின் முடிவுகளும் ஒத்துள்ளன. இதுமாதிரியான சம்பவங்கள் எல்லாம் அரிதினும் அரிது. 

Right, NOW it's getting spooky. pic.twitter.com/qdCjRwGAJj

— Cricket World Cup (@cricketworldcup)
click me!