மகளிர் டி20 உலக கோப்பை: இங்கிலாந்து - பாகிஸ்தான் மோதல்..! டாஸ் ரிப்போர்ட்

Published : Feb 21, 2023, 06:34 PM IST
மகளிர் டி20 உலக கோப்பை: இங்கிலாந்து - பாகிஸ்தான் மோதல்..! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

மகளிர் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

மகளிர் டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய 5 அணிகள் க்ரூப் ஏ-விலும், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 5 அணிகள் க்ரூப் பி-யிலும் இடம்பெற்று லீக் சுற்றில் ஆடின.

இன்றுடன் லீக் சுற்று முடிவடைகிறது. க்ரூப் பி-யிலிருந்து இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. க்ரூப் ஏ-விலிருந்து ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தினால் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு முன்னேறும். தென்னாப்பிரிக்கா தோற்றால் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

ஃபாஸ்ட் பவுலர் கேப்டனாக இருந்தால் பெரிய பிரச்னை..! பாட் கம்மின்ஸின் கேப்டன்சியை விளாசிய ஆலன் பார்டர்

க்ரூப் பி-யில் ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஏற்கனவே தொடரைவிட்டு வெளியேறிவிட்ட பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டியில் இழப்பதற்கு எதுவும் இல்லை. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து மகளிர் அணி:

சோஃபியா டன்க்ளி, டேனியல் வியாட், அலைஸ் கேப்ஸி, நாட் ஸ்கைவர் பிரண்ட், ஹீதர் நைட் (கேப்டன்), எமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), சோஃபி எக்லிஸ்டோன், கேத்ரின் ஸ்கைவர் பிரண்ட், சார்லோட் டீன், சாரா க்ளென், ஃப்ரெயா டேவிஸ்.

பென்ச்சில் உட்கார வைப்பதற்கு ஏன் அவரை இந்தியாவிற்கு கூட்டிட்டு போனீங்க! ஆஸி., அணி தேர்வை விளாசிய கில்கிறிஸ்ட்

பாகிஸ்தான் மகளிர் அணி:

சடாஃப் ஷமஸ், முனீபா அலி, ஒமைமா சொஹைல், நிதா தர் (கேப்டன்), ஆலியா ரியாஸ், சிட்ரா அமீன், ஃபாத்திமா சனா, சிட்ரா நவாஸ் (விக்கெட் கீப்பர்), நஷ்ரா சந்து, டுபா ஹசன், சாதியா இக்பால்.
 

PREV
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!