நீங்களா இருந்தா தோனியை எடுப்பீங்களா..? அதிரடியான கேள்விக்கு வில்லியம்சனின் ஸ்மார்ட்டான பதில்

By karthikeyan VFirst Published Jul 11, 2019, 5:52 PM IST
Highlights

தோனியின் மந்தமான பேட்டிங் ஏற்கனவே விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்த நிலையில், இந்த போட்டியில் தோனியின் ஆட்டமும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. 

உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று இந்திய அணி வெளியேறியது. 

மான்செஸ்டரில் நடந்த இந்த போட்டியில் 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 221 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் ஜடேஜாவும் தோனியும் மட்டுமே நன்றாக ஆடினர். ரிஷப் பண்ட்டும் ஹர்திக் பாண்டியாவும் ஓரளவிற்கு ஆடி இருவரும் தலா 32 ரன்களை அடித்து பங்களிப்பு செய்தனர்.

அதன்பின்னர் ஜடேஜா பொறுப்பை தனது தோள்களில் சுமந்தார். தனி நபராக கடுமையாக போராடிய ஜடேஜா, பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஜடேஜா ஒருமுனையில் அதிரடியாக ஆடிவந்ததால் அவருக்கு சிங்கிள் தட்டி கொடுக்கும் வேலையை மட்டும் தோனி செய்துவந்தார்.

ஏனெனில் ஜடேஜா நன்றாக ஆடிக்கொண்டிருப்பதால் அவரிடம் ஸ்ட்ரைக் கொடுப்பதே சரியாக இருக்கும் என்பதால் அவருக்கு அதிக ஸ்ட்ரைக்குகள் கொடுத்தார். கடைசி நேரத்தில் அடிக்க வேண்டிய கட்டாயம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று கெத்தாக நின்றார் தோனி. அதேபோலவே ஜடேஜா நின்றவரை பொறுமை காத்த தோனி, ஜடேஜாவின் விக்கெட்டுக்கு பிறகு அடிக்க ஆரம்பித்தார். ஆனால் 49வது ஓவரில் கப்டில் அபாரமான டேரக்ட் த்ரோவால் ரன் அவுட்டாகி வெளியேறினார். 

தோனியின் மந்தமான பேட்டிங் ஏற்கனவே விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்த நிலையில், இந்த போட்டியில் தோனியின் ஆட்டமும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. தோனியின் மந்தமான ஆட்டம்தான் ஜடேஜாவிற்கு அழுத்தத்தை அதிகரித்தது என்ற ஒரு கருத்து உள்ளது. இந்நிலையில், இந்த போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனிடம், நீங்கள் தோனியின் கேப்டனாக இருந்தால், அவரை அணியில் எடுப்பீர்களா என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். 

அதற்கு ஸ்மார்ட்டாக பதிலளித்த வில்லியம்சன், தோனி நியூசிலாந்து அணியில் ஆடமுடியாது. ஒருவேளை அவர் இந்திய குடியுரிமையை விட்டு நியூசிலாந்து குடிமகனாக தயாராக இருந்தால் அதுகுறித்து யோசிக்கலாம். ஆனால் தோனி ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என்று பதிலளித்தார்.

click me!