அவுட்டே இல்லாம வெளியே போன கோலி.. அவுட்டுனு தெரிஞ்சும் அப்படியே நின்ற வில்லியம்சன்.. அதுல தப்பு ஒண்ணும் இல்லையே

By karthikeyan VFirst Published Jun 20, 2019, 2:09 PM IST
Highlights

வில்லியம்சன் தாஹிர் வீசிய 38வது ஓவரில் அவுட்டாகியிருக்க வேண்டியவர். தாஹிரின் அந்த ஓவரில் கடைசி பந்தில் வில்லியம்சனின் பேட்டில் பட்ட பந்தை விக்கெட் கீப்பர் டி காக் கேட்ச் பிடித்தார். தாஹிர் அப்பீல் செய்ய, அம்பயரோ அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். அதற்கு தென்னாப்பிரிக்க கேப்டன் ரிவியூ கேட்கவில்லை. ஆனால் ரிப்ளேவில் அது அவுட்டுதான் என்று தெரிந்தது. 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகளும் ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகின்றன. 

நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையே நேற்று நடந்த போட்டியிலும் நியூசிலாந்து அணிதான் வென்றது. நியூசிலாந்து அணி 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்க அணி ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. இதுவரை 6 போட்டிகளில் ஆடி ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளதால் அரையிறுதிக்கு தென்னாப்பிரிக்கா முன்னேற வாய்ப்பே இல்லை. 

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியிடமிருந்து வெற்றியை பறித்தவர் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். மறுமுனையில் நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் சரிய, ஒருமுனையில் நிலைத்து நின்று நிதானமாக ஆடிய வில்லியம்சன் சதமடித்து அணியை வெற்றி பெற செய்தார். 

வில்லியம்சன் தாஹிர் வீசிய 38வது ஓவரில் அவுட்டாகியிருக்க வேண்டியவர். தாஹிரின் அந்த ஓவரில் கடைசி பந்தில் வில்லியம்சனின் பேட்டில் பட்ட பந்தை விக்கெட் கீப்பர் டி காக் கேட்ச் பிடித்தார். தாஹிர் அப்பீல் செய்ய, அம்பயரோ அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். அதற்கு தென்னாப்பிரிக்க கேப்டன் ரிவியூ கேட்கவில்லை. ஆனால் ரிப்ளேவில் அது அவுட்டுதான் என்று தெரிந்தது. 

ஆனால் அது அவுட்டுதான் என்று வில்லியம்சனுக்கு தெரிந்திருக்கும். எனவே அவர் நேர்மையாக நடந்திருக்கலாம் என்ற விமர்சனங்களும் கருத்துகளும் சமூக வலைதளங்களில் உலாவருகின்றன. ஆனால் அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அவசியமே கிடையாது. ஏனெனில் அது அவுட்டுதான் என்ற சந்தேகம் இருந்தால் பவுலிங் அணி ரிவியூ செய்யும் வாய்ப்பிருக்கிறது. எனவே பேட்ஸ்மேன் அவராகவே செல்ல வேண்டும் என்று நினைக்கவே முடியாது. டி.ஆர்.எஸ் முறை இல்லாத காலம் என்றால் பரவாயில்லை. ஆனால் டி.ஆர்.எஸ் இல்லாத காலத்திலேயும் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை என்றால் போக வேண்டிய அவசியமில்லை. 

ஏனெனில் இக்கட்டான சூழலில் அணியை தனி ஒருவனாக வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் வீரர், கடைசி வரை நின்று அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றுதான் நினைப்பார். தென்னாப்பிரிக்க அணி ரிவியூவை ஏன் பயன்படுத்தவில்லை..? ரிவியூ வேஸ்ட் ஆகிவிட்டால், மறுபடியும் இதைவிட க்ளோசான ஒரு விக்கெட் வாய்ப்பு கிடைத்தால் ரிவியூ இருக்காது என்ற எண்ணத்தில்தானே பயன்படுத்தவில்லை. அதேபோலத்தான் எந்த வீரருக்குமே அவரது அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இருக்கும். 

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவுட்டே இல்லாததற்கு, அம்பயர் அவுட் கொடுக்காதபோதும் விராட் கோலி அதிகப்பிரசங்கித்தனமாக அவராகவே வெளியேறினார். ஆனால் பந்து பேட்டில் படவேயில்லை. அப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. 
 

click me!