India vs West Indies:2வது ஒருநாள் போட்டி டாஸ் ரிப்போர்ட்!முதலில் பேட்டிங் ஆடும் இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம்

Published : Feb 09, 2022, 01:20 PM IST
India vs West Indies:2வது ஒருநாள் போட்டி டாஸ் ரிப்போர்ட்!முதலில் பேட்டிங் ஆடும் இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம்

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2வது ஒருநாள் போட்டி நடக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸூம் களமிறங்குகின்றன.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஒரு மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் போட்டியில் ஆடாத கேஎல் ராகுல் அணிக்குள் வந்திருப்பதால் இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளார். அதைத்தவிர வேறு மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு இந்த போட்டியில் காயம் காரணமாக ஆடவில்லை. எனவே நிகோலஸ் பூரன் அணியை வழிநடத்துகிறார். பொல்லார்டுக்கு பதிலாக ஒடீன் ஸ்மித் அணியில் இணைந்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஷேய் ஹோப் (விக்கெட் கீப்பர்), பிரண்டன் கிங், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், நிகோலஸ் பூரன் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ஒடீன் ஸ்மித், அகீல் ஹுசைன், ஃபேபியன் ஆலன், அல்ஸாரி ஜோசஃப், கீமார் ரோச்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ind Vs SA 1st T20: கில், பாண்டியா கம்பேக்.. புல் போர்சுடன் களம் இறங்கும் இந்திய அணி..!
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!