India vs West Indies: 2வது ஒருநாள் போட்டியில் ராகுல் உள்ளே.. யாரு வெளியே..? இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

Published : Feb 09, 2022, 11:50 AM IST
India vs West Indies: 2வது ஒருநாள் போட்டியில் ராகுல் உள்ளே.. யாரு வெளியே..? இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

2வது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆடாத கேஎல் ராகுல், 2வது போட்டியில் ஆடுகிறார். கேஎல் ராகுல் அணிக்குள் வருவதால் கடந்த போட்டியில் ரோஹித்துடன் ஓபனராக இறங்கிய இஷான் கிஷன் இந்த போட்டியில் ஆடமாட்டார்.

இந்திய அணியில் இந்த ஒரு மாற்றத்தைத்தவிர வேறு மாற்றம் எதுவும் செய்யப்பட வாய்ப்பில்லை. மற்றபடி, அணி காம்பினேஷன் அதே மாதிரியாகத்தான் இருக்கும்.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?