#WIvsPAK ஆபத்திலிருந்து மீண்ட பாகிஸ்தான் அணி.. 2ம் நாள் ஆட்டத்தில் விளையாடிய மழை..! முக்கியமான 3ம் நாள் ஆட்டம்

By karthikeyan VFirst Published Aug 22, 2021, 6:47 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இடையேயான 2வது டெஸ்ட்டின் இன்றைய 3ம் நாள் ஆட்டம் இரு அணிகளுக்குமே மிக முக்கியமானது.
 

வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடும் பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர்கல் படுமட்டமாக பேட்டிங் ஆடினர்.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அபித் அலியை முதல் ஓவரிலேயே ஒரு ரன்னுக்கு வீழ்த்தி வெளியேற்றிய கீமார் ரோச், அவரது அடுத்த ஓவரில் அசார் அலியை டக் அவுட்டாக்கி அனுப்பினார். மற்றொரு தொடக்க வீரரான இம்ரான் பட்டும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, வெறும் 2 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான் அணி.

அப்படியான இக்கட்டான நிலையிலிருந்து பாபர் அசாமும் ஃபவாத் ஆலமும் இணைந்து அபாரமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தனர். இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 166 ரன்களை குவித்தனர். இருவருமே அரைசதம் அடித்தனர். பாபர் அசாம் 75 ரன்னில் ஆட்டமிழக்க, ஃபவாத் ஆலம் 76 ரன்னில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார்.

அதன்பின்னர் முகமது ரிஸ்வானும் ஃபஹீம் அஷ்ரஃபும் இணைந்து ஆடிவருகின்றனர். முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் அடித்திருந்தது பாகிஸ்தான் அணி. 2ம் நாள் ஆட்டம் முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்டது. 

எனவே 3ம் நாளான இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியமான ஆட்டம். முதல் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் வெஸ்ட் இண்டீஸ் ஆதிக்கம் செலுத்திய நிலையில், அடுத்த 2 செசனிலும் பாகிஸ்தான் பட்டையை கிளப்பியது. இந்த போட்டியில் 3ம் நாளான இன்றைய ஆட்டம் மிக முக்கியமானது. ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கக்கூடிய நாள்.
 

click me!