India vs West Indies: டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

Published : Jan 30, 2022, 03:21 PM IST
India vs West Indies: டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள்  போட்டிகளும், பிப்வரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும் நடக்கவுள்ளன.

இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான வெஸ்ட் இண்டீஸின் ஒருநாள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், டி20 அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கைரன் பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஃபேபியன் ஆலன், பானர், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், ஜேசன் ஹோல்டர், நிகோலஸ் பூரன், ஷேய் ஹோப், பிரண்டன் கிங் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஃபாஸ்ட் பவுலர்களாக ஷெல்டான் காட்ரெல், ரொமாரியோ ஷெஃபெர்டு, ஒடீன் ஸ்மித் ஆகியோர் எடுக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்த ஷமர் ப்ரூக்ஸ், பானர், கீமார் ரோச் ஆகிய வீரர்கள் டி20 அணியில் இடம்பெறவில்லை. 

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி:

 கைரன் பொல்லார்டு (கேப்டன்), நிகோலஸ் பூரன் (துணை கேப்டன்), ஃபேபியன் ஆலன், டேரன் பிராவோ, ரோஸ்டான் சேஸ், ஷெல்டான் காட்ரெல், டோமினிக் ட்ரேக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷேய் ஹோப், அகீல் ஹுசைன், பிரண்டன் கிங், ரோவ்மன் பவல், ஒடீன் ஸ்மித், ரொமாரியோ ஷெஃபெர்டு, கைல் மேயர்ஸ், ஹைடன் வால்ஷ்.
 
இந்திய டி20 அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ரவி பிஷ்னோய், அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல்.
 

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?