West Indies vs England:பேட்டிங்கில் காட்டடி,பவுலிங்கில் அபாரம்!மொயின் அலியின் மாஸ் பெர்ஃபாமன்ஸால் இங்கி வெற்றி

Published : Jan 30, 2022, 02:44 PM IST
West Indies vs England:பேட்டிங்கில் காட்டடி,பவுலிங்கில் அபாரம்!மொயின் அலியின் மாஸ் பெர்ஃபாமன்ஸால் இங்கி வெற்றி

சுருக்கம்

மொயின் அலியின் அதிரடி பேட்டிங், அபாரமான பவுலிங் ஆகியவற்றின் விளைவாக இங்கிலாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் 4வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 2-2 என தொடரை சமன் செய்தது.  

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது இங்கிலாந்து அணி. முதல் மற்றும் 3வது டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், 2வது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என முன்னிலை வகித்தது. 

4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டாம் பாண்டன் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஜேசன் ராய் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த ராய் 52 ரன்னில் ஆட்டமிழக்க, ஜேம்ஸ் வின்ஸ் 34 ரன்கள் அடித்தார். 4ம் வரிசையில் ஆடிய கேப்டன் மொயின் அலி காட்டடி அடித்தார். 28 பந்தில் 1 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களுடன் 63 ரன்களை குவித்தார் மொயின் அலி. 

கடைசியில் வெறும் 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட சாம் பில்லிங்ஸ் 4 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 13 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 193 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி.

194 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 23 பந்தில் 40 ரன்கள் அடித்தார். ஜேசன் ஹோல்டர் 24 பந்தில் 36 ரன்கள் அடித்தார். பொல்லார்டு 16 பந்தில் 18 ரன்கள் அடித்தார். 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 159 ரன்கள் மட்டுமே அடித்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் அசத்திய மொயின் அலி, பவுலிங்கிலும் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 2-2 என டி20 தொடரை சமன் செய்துள்ளது இங்கிலாந்து அணி. தொடர் சமனடைந்துள்ள நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20  போட்டி இந்திய நேரப்படி ஜனவரி 31 நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கி நடக்கவுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?