இந்த உலகிற்கு நீ யாருனு காட்ட வேண்டிய நேரம் வந்துருச்சு! போ.. போய் காட்டு! ஆவேஷ் கானை உசுப்பேற்றிய பாண்டிங்

By karthikeyan VFirst Published Jan 29, 2022, 9:51 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனுக்கு முன்பாக ரிக்கி பாண்டிங் தன்னை உத்வேகப்படுத்தியது குறித்து ஆவேஷ் கான் பேசியுள்ளார்.
 

5 ஆண்டுகளாக ஐபிஎல்லில் ஆடிவந்தாலும், ஐபிஎல் 14வது சீசன்(2021) தான் ஆவேஷ் கானின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய சீசன். டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடிவரும் 25 வயது இளம் ஃபாஸ்ட் பவுலரான ஆவேஷ் கான், 14வது சீசனில் அபாரமாக பந்துவீசினார்.

ஐபிஎல் 14வது சீசனில் மிகச்சிறப்பாக பந்துவீசி எதிரணிகளை தெறிக்கவிட்ட ஆவேஷ் கான், 24 விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது பவுலராக சீசனை முடித்தார். 140 கிமீ வேகத்திற்கு மேல் வீசி மிரட்டியதுடன், நல்ல வேரியேஷனிலும் வீசினார். 

தொடக்க ஓவர்கள், டெத் ஓவர்கள், மிடில் ஓவர்கள் என ஆட்டத்தின் அனைத்து சூழல்களிலும் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். அதன்விளைவாக, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஐபிஎல் 14வது சீசனுக்கு முன்பாக டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தன்னை எப்படி உத்வேகப்படுத்தினார் என்று கூறியிருக்கிறார் ஆவேஷ் கான்.

இதுகுறித்து பேசிய ஆவேஷ் கான், ரபாடா மற்றும் நோர்க்யா ஆகிய இருவருமே காயமடைந்ததால், எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எனக்கு தெரியும். எனவே கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். சீசன் தொடங்குவதற்கு முன்பாக என்னை அழைத்து பேசினார் ரிக்கி பாண்டிங். அப்போது அவர் என்னிடம், “உனக்கான (ஆவேஷ் கான்) நேரம் வந்துவிட்டது யங் மேன்.. உனது திறமையை இந்த உலகிற்கு காட்டு.. உன் திறமை என்னவென்பது எங்களுக்கு தெரியும். அதை இந்த உலகிற்கும் காட்டு” என்று என்னிடம் பாண்டிங் கூறினார். அவரது வார்த்தைகள் என்னை உத்வேகப்படுத்தின. அவர் என்னிடம் பேசியதுமே, நான் புது பலம் பெற்றேன் என்று ஆவேஷ் கான் தெரிவித்தார்.
 

click me!