டி20 உலக கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு..! இரு மாபெரும் டி20 ஜாம்பவான்களுக்கு அணியில் இடம் இல்லை

By karthikeyan V  |  First Published Sep 15, 2022, 4:00 PM IST

டி20 உலக கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆண்ட்ரே ரசல் மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரும் இடம்பெறவில்லை.
 


டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், ஒவ்வொரு அணியாக அறிவிக்கப்பட்டுவருகிறது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிகோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் ரோஹித் - கோலி ஓபனிங்..! பரிதாப ராகுல்

பூரன் தலைமையிலான அணியில் ரோவ்மன் பவல், எவின் லூயிஸ்,பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஒடீன் ஸ்மித், ஷிம்ரான் ஹெட்மயர், அல்ஸாரி ஜோசஃப், ஜேசன் ஹோல்டர், ஷெல்டான் காட்ரெல், ஒபெட் மெக்காய், அகீல் ஹுசைன் ஆகிய வழக்கமான வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

டி20 ஜாம்பவான்களான ஆண்ட்ரே ரசல்   மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெறவில்லை. டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் 2 சிறந்த ஆல்ரவுண்டர்களான ரசல் மற்றும் நரைன் அணியில் இடம்பெறவில்லை. ரசலுக்கு பதிலாக ஃபார்மில் உள்ள நல்ல இளம் வீரரை தயார்ப்படுத்த வெஸ்ட் இண்டீஸ் நினைக்கிறது. ரசலை தாண்டி யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் ரசல் கழட்டிவிடப்பட்டுள்ளார்.

ஆனால் சுனில் நரைன் டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸுக்காக ஆட விரும்பவில்லை என்று தெரிகிறது. டி20 லீக் தொடர்களில் ஆடுவதை மட்டுமே நரைன் விரும்புகிறார். அவர் நாட்டுக்காக பெரிதாக ஆடுவதில்லை.

இதையும் படிங்க - மிஸ்டர் அஃப்ரிடி & அக்தர் உங்க வேலையை நீங்க பாருங்க.! எப்ப ஓய்வு பெறணும்னு கோலிக்கு தெரியும்

ரசல் மற்றும் நரைன் ஆகிய 2 பெரிய வீரர்கள் அணியில் இல்லாத நிலையில், ஸ்பின் ஆல்ரவுண்டர் யானிக் காரியா, பேட்டிங் ஆல்ரவுண்டர் ரேமான் ரைஃபர் ஆகிய 2 வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் முதல் முறையாக எடுக்கப்பட்டுள்ளனர்.

டி20 உலக கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:

நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மன் பவல் (துணை கேப்டன்), எவின் லூயிஸ், பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஒடீன் ஸ்மித், ஜான்சன் சார்லக்ஸ், ஷிம்ரான் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ரேமன் ரைஃபர், ஒபெட் மெக்காய், அல்ஸாரி ஜோசஃப், அகீல் ஹுசைன், ஷெல்டான் காட்ரெல், யானிக் காரியா.
 

click me!