டாப் 3 பேட்ஸ்மேன்களை ஆரம்பத்துலயே தட்டி தூக்கிய இங்கிலாந்து பவுலர்கள்!! வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர்கள் 2 பேருக்கு இதுதான் செம சான்ஸ்

By karthikeyan VFirst Published Jun 14, 2019, 4:53 PM IST
Highlights

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாப் 3 பேட்ஸ்மேன்களை இங்கிலாந்து அணி 55 ரன்களுக்கே கழட்டிவிட்டது. 
 

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாப் 3 பேட்ஸ்மேன்களை இங்கிலாந்து அணி 55 ரன்களுக்கே கழட்டிவிட்டது. 

சவுத்தாம்ப்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், வெஸ்ட் இண்டீஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 3 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கெய்லும் எவின் லெவிஸும் களமிறங்கினர். 

கெய்லும் லெவிஸும் நிதானமாக தொடங்கினர். அவசரப்பட்டு தொடக்க ஓவர்களில் விக்கெட்டை இழந்துவிடக்கூடாது. களத்தில் நிலைத்துவிட்டால் பின்னர் அடித்து ஆடலாம் என்பதை உணர்ந்த கெய்ல், மிகவும் நிதானமாக தொடங்கினர். முதல் ரன்னையே 10 பந்துகளில் தான் எடுத்தார். ஆனால் லெவிஸ் வெறும் 2 ரன்களில் மூன்றாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் கெய்லுடன் ஷாய் ஹோப் ஜோடி சேர்ந்தார். ஹோப் நிதானமாக ஆட, கெய்ல் அதிரடியை தொடங்கினார். 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 36 ரன்கள் அடித்த கெய்ல், பிளங்கெட்டின் பந்தில் ஆட்டமிழந்தார். கெய்ல் அவசரப்பட்டு அவுட்டாக, அவரை தொடர்ந்து ஷாய் ஹோப்பும் மார்க் உட்டின் பந்தில் வெறும் 11 ரன்களுக்கு நடையை கட்டினார். 

இதையடுத்து 55 ரன்களுக்கே வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இளம் வீரர்கள் நிகோலஸ் பூரானும் ஷிம்ரன் ஹெட்மயரும் இணைந்து ஆடிவருகின்றனர். இளம் வீரர்களான இவர்கள் இருவருக்கும் இது ஒரு சிறப்பான வாய்ப்பு. ஆட்டத்தின் சூழலை கருத்தில் கொண்டு நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்து வெஸ்ட் இண்டீஸ் அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க அவர்களுக்கு அரிய வாய்ப்பு. 

அதிரடி பேட்ஸ்மேன்களான பூரானும் ஹெட்மயரும் தங்களால் சூழலுக்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் ஆடமுடியும் என்பதை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இளம் வீரர்களான இவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக ஆடி அணியின் நம்பிக்கையை பெறமுடியும். ஆனால் என்ன செய்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். 
 

click me!