ஃபார்முக்கு வந்து அடித்து நொறுக்கிய கிறிஸ் கெய்ல்! 3வது டி20யிலும் ஆஸி.,யை வீழ்த்தி தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ்

By karthikeyan VFirst Published Jul 13, 2021, 2:18 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 3-0 என டி20 தொடரை வென்றது. 
 

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, 3வது டி20 போட்டியிலாவது வெற்றி பெறும் முனைப்பில் ஆடியது.

இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு தொடங்கி நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது. முதல் 2 போட்டிகளிலும் பேட்டிங்கில் சொதப்பிய ஆஸ்திரேலிய அணி, இந்த போட்டியிலும் பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பியது.

மிடில் ஆர்டர் வீரர் ஹென்ரிக்ஸ் தான் அதிகபட்சமாக 33 ரன்கள் அடித்தார். கேப்டன் ஃபின்ச் 30 ரன்கள் அடித்தார். தொடக்க வீரர் மேத்யூ வேட் 23 ரன்களும், அஷ்டான் டர்னர் 24 ரன்களும் அடித்தனர். யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடாததால், 20 ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெறும் 141 ரன்கள் மட்டுமே அடித்தது.

142 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் சீனியர் வீரரும் அதிரடி மன்னனுமான கிறிஸ் கெய்ல், அடித்து ஆடி அரைசதம் அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக வெற்றி பெற செய்தார். முதல் 2 போட்டிகளில் சரியாக ஆடாத கெய்ல், ஃபார்முக்கு வந்து அடித்து ஆடி 38 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 67 ரன்கள குவித்தார். கேப்டன் நிகோலஸ் பூரன் தன் பங்கிற்கு 32 ரன்கள் அடிக்க, 15வது ஓவரிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இந்த வெற்றியின் மூலம் 3-0 என டி20 தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.
 

click me!