#ENGvsPAK ஆறுதல் வெற்றியாவது பெற துடிக்கும் பாக்.,! கடைசி ஒருநாள் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Jul 12, 2021, 10:11 PM IST
Highlights

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் படுமோசமாக தோற்று தொடரை இழந்தது. 2 போட்டிகளிலுமே பேட்டிங் படுமோசமாக இருந்தது. பவுலிங்கும் சொல்லும்படியாக இல்லை. ஆனால் பேட்டிங் படுமோசம்.

ஒயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அந்த அணியை முற்றிலுமாக மாற்றி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அனுபவமற்ற வீரர்களை கொண்ட அணியை களமிறக்கியது இங்கிலாந்து. ஆனால் அந்த இங்கிலாந்து அணியிடமே படுதோல்வி அடைந்தது.

அனுபவமற்ற இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான், கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. ஜூலை 13 எட்ஜ்பாஸ்டனில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச இங்கிலாந்து அணி:

ஃபில் சால்ட், டேவிட் மலான், ஜாக் க்ராவ்லி, ஜெம்ஸ் வின்ஸ், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜான் சிம்ப்சன்(விக்கெட் கீப்பர்), லெவிஸ் க்ரெகோரி, க்ரைக் ஓவர்டன், ப்ரைடன் கார்ஸ், சாகிப் மஹ்மூத், மேட் பார்கின்சன்.

உத்தேச பாகிஸ்தான் அணி: 

இமாம் உல் ஹக், ஃபகர் ஜமான், பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), சௌத் ஷகீப், சொஹைப் மக்சூத், ஷதாப் கான், ஃபஹீம் அஷ்ரஃப்/முகமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி, ஹாரிஸ் ரௌஃப்.
 

click me!