தொடர்ந்து சொதப்புறவனுக்கு அணியில் நிரந்தர இடம்; நல்லா ஆடுனா இடம் இல்ல!நல்லா இருக்குடா உங்க நியாயம்-சல்மான் பட்

By karthikeyan VFirst Published Jul 12, 2021, 9:46 PM IST
Highlights

தொடர்ந்து சொதப்பும் ஃபஹீம் அஷ்ரஃபுக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கும் பாகிஸ்தான் அணி, நன்றாக ஆடும் உஸ்மான் காதிருக்கு அணியில் வாய்ப்பே வழங்குவதேயில்லை என்று சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் படுமோசமாக தோற்று தொடரை இழந்தது. 2 போட்டிகளிலுமே பேட்டிங் படுமோசமாக இருந்தது. பவுலிங்கும் சொல்லும்படியாக இல்லை. ஆனால் பேட்டிங் படுமோசம்.

ஒயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அந்த அணியை முற்றிலுமாக மாற்றி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அனுபவமற்ற வீரர்களை கொண்ட அணியை களமிறக்கியது இங்கிலாந்து. ஆனால் அந்த இங்கிலாந்து அணியிடமே படுதோல்வி அடைந்தது.

அனுபவமற்ற இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் அடைந்த படுதோல்வி, அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்சமாம் உல் ஹக், அக்தர் ஆகியோர் பாக்., அணியை விமர்சித்திருந்தனர்.

பாகிஸ்தான் அணியை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துவரும் நிலையில், அந்த அணியின் நியாயமற்ற செயல்பாட்டை சல்மான் பட்டும் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய சல்மான் பட், அனுபவமற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் லெக் ஸ்பின்னுக்கு எதிராக திணறுகிறார்கள். அதனால் 2 லெக் ஸ்பின்னர்களை இறக்கி இங்கிலாந்து வீரர்களை கட்டுப்படுத்த வேண்டும். கடந்த 2-3 சுற்றுப்பயணங்களில் பாகிஸ்தான் அணியில் ஃபார்மில் இருந்த லெக் ஸ்பின்னர் உஸ்மான் காதிர் தான். ஆனால், தொடர்ந்து சொதப்பிவரும் ஃபஹீம் அஷ்ரஃபிற்கு தொடர் வாய்ப்புகள் வழங்கும் பாகிஸ்தான் அணி, நன்றாக ஆடும் உஸ்மான் காதிரை எடுப்பதில்லை என்று விமர்சித்துள்ளார்.
 

click me!