5 விக்கெட் எடுத்துட்டு இந்த அலப்பறையை எல்லாம் பண்ணுப்பா..! ஷாஹீன் அஃப்ரிடியை விளாசிய அக்தர்

By karthikeyan VFirst Published Jul 12, 2021, 9:23 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் படுதோல்விகளால் கடும் அதிருப்தியில் இருந்த ஷோயப் அக்தர், பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடியை மிகக்கடுமையாக விளாசியுள்ளார்.
 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் படுமோசமாக தோற்று தொடரை இழந்தது. 2 போட்டிகளிலுமே பேட்டிங் படுமோசமாக இருந்தது. பவுலிங்கும் சொல்லும்படியாக இல்லை. ஆனால் பேட்டிங் படுமோசம்.

ஒயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அந்த அணியை முற்றிலுமாக மாற்றி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அனுபவமற்ற வீரர்களை கொண்ட அணியை களமிறக்கியது இங்கிலாந்து. ஆனால் அந்த இங்கிலாந்து அணியிடமே படுதோல்வி அடைந்தது.

அனுபவமற்ற இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் அடைந்த படுதோல்வி, அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்சமாம் உல் ஹக், அக்தர் ஆகியோர் பாக்., அணியை விமர்சித்திருந்தனர்.

அணிக்காக சிறப்பான பங்களிப்பை செய்து வெற்றி பெற வைக்காமல், ஒரு விக்கெட் எடுத்தால் கூட ஃப்ளையிங் கிஸ் கொடுத்து கொண்டாடும் ஷாஹீன் அஃப்ரிடியை விமர்சித்துள்ளார் அக்தர்.

ஷாஹீன் அஃப்ரிடி குறித்து பேசியுள்ள ஷோயப் அக்தர், ஷாஹீன் அஃப்ரிடிக்கு விக்கெட் எடுப்பதை விட ஃப்ளையிங் கிஸ் கொடுக்கத்தான் பிடித்திருக்கிறது. 5 விக்கெட் வீழ்த்தினாலோ அல்லது எதிரணியின் பேட்டிங் ஆர்டரை சிதைத்து அணியின் வெற்றிக்கு உதவினாலோ ஃபிளையிங் கிஸ் கொடுத்து, கட்டிப்பிடித்து கொண்டாடலாம். வெறும் ஒரு விக்கெட்டுக்குலாம் இது தேவையா என்று அக்தர் விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்தே 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார் ஷாஹீன் அஃப்ரிடி.
 

click me!