#WIvsAUS 3வது டி20 போட்டி: தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஆஸி.,? இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Jul 12, 2021, 6:52 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலுமே வெஸ்ட் இண்டீஸிடம் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, 3வது போட்டியிலாவது வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. 

ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸை குறைத்து மதிப்பிட்டு, அதன் விளைவாக முன்னணி வீரர்கள் சிலரை வெஸ்ட் இண்டீஸுக்கு அனுப்பாமல் இருந்தது. ஆனால் அதன் பலனாக தொடர் தோல்விகளை தழுவிவருகிறது. ஆனாலும் இருக்கிற அணியை வைத்து ஆடவேண்டிய கட்டாயத்தில் உள்ள ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தடுத்த போட்டிகளும் சவாலானதாகவே இருக்கும்.

3வது டி20 போட்டி, இந்திய நேரப்படி நாளை(ஜூலை 13) 5 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. அதற்கான அவசியமும் இல்லை. ஆஸ்திரேலிய அணியில் டேனியல் கிறிஸ்டியனுக்கு பதிலாக அஷ்டன் டர்னர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

உத்தேச வெஸ்ட் இண்டீஸ் அணி:

லெண்டல் சிம்மன்ஸ், ஆண்ட்ரே ஃப்ளெட்சர், கிறிஸ் கெய்ல், ஷிம்ரான் ஹெட்மயர், நிகோலஸ் பூரன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், ஃபேபியன் ஆலன், ட்வைன் பிராவோ, ஹைடன் வால்ஷ், ஷெல்டான் காட்ரெல், ஃபிடல் எட்வர்ட்ஸ்.

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், ஜோஷ் ஃபிலிப், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், பென் மெக்டெர்மோட், டேனியல் கிறிஸ்டியன்/அஷ்டான் டர்னர், அஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
 

click me!